Your cart is empty.


ஷகி பெய்ன் (இ-புத்தகம்)
பிரிட்டனில் மார்கரெட் தாட்சர் பிரதமராக இருந்த எண்பதுகள்தான் ஷகி பெய்ன் நாவலின் காலகட்டம். பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் அரசு மானியத்தில் ஸ்காட்லாந்தில் இயங்கிவரும் நிறுவனங்களை தாட்சர் … மேலும்
பிரிட்டனில் மார்கரெட் தாட்சர் பிரதமராக இருந்த எண்பதுகள்தான் ஷகி பெய்ன் நாவலின் காலகட்டம். பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் அரசு மானியத்தில் ஸ்காட்லாந்தில் இயங்கிவரும் நிறுவனங்களை தாட்சர் மூடிவிட்டார். ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் நடுத்தெருவில் நின்றார்கள். குடும்பங்கள் சிதையத் தொடங்கின. தொழிலாளர் வர்க்கம் பெரும் சீரழிவுக்குள்ளாகியது.
லாப நஷ்டக் கணக்கு பார்த்துச் செயல்படும் முதலாளித்துவ அரசாங்கங்கள் அடித்தட்டு மக்களைப் பொருட்டாகக் கருதுவதில்லை என்பதற்கான இலக்கிய சாட்சியங்களில் ஒன்று டக்ளஸ் ஸ்டூவர்ட்டின் ‘ஷகி பெய்ன்.’ இந்தப் பிரச்சினையின் பின்னணியில் ஷகி பெய்ன் என்னும் இளைஞனையும் அவன் குடும்பத்தையும் சுற்றி இந்த நாவல் வளர்கிறது. தன்பாலீர்ப்பாளர்கள், பால்புதுமையினர் பற்றிய நுட்பமான சித்தரிப்புகளும் இந்த நாவலில் அழுத்தமாக இடம்பெற்றுள்ளன. எந்த நிலையிலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காத பாசப் பிணைப்பு கொண்ட தாய் - மகன் உறவும் இந்த நாவலின் சிறப்பம்சங்களில் ஒன்று.
நாவலாசிரியரின் குரல் வாசகரின் இதயத்தைத் துளைப்பதற்குக் காரணம் அதன் உண்மைத்தன்மையும் வீரியமும்தான்.
ISBN : 9789355239051
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
கடவுளின் நண்பர்கள் (இ-புத்தகம்)
தமிழ் இலக்கியப்பரப்பில் அதிகம் இடம்பெறாத ஒரு களத்தை எடுத்துக்கொண்டு அதிகம் பேசப்படாத விஷயங்களைப் மேலும்
காலமும் நெருப்புத்துண்டங்களும் (இ-புத்தகம்)
புலம்பெயர் வாழ்வின் அந்நியத் தன்மை, வெறுமை ஆகியவை ஈழத் தமிழர்களுக்கும் மேலான வாழ்நிலையை நாடிச் செ மேலும்