Your cart is empty.
ததும்புதலின் பெருங்கணம்
மோகனப்ரியாவின் கவிதைகள் பெரும்பாலும் சிங்கப்பூர் வாழ்வனுபவத்தில் தோய்ந்தவை. பட்டினத்து … மேலும்
மோகனப்ரியாவின் கவிதைகள் பெரும்பாலும் சிங்கப்பூர் வாழ்வனுபவத்தில் தோய்ந்தவை. பட்டினத்து வாழ்வைப் பாடுபவை.
உள் உறை வெளியில், சொல் பிளந்து பூக்கின்ற மாயநிலப் பாடல்கள் இவருடைய கவிதைகள், இயற்கையின் மீதான இடையறா ஈர்ப்பும் நகர வாழ்வு தரும் நெருக்கடிகளும் சிக்கல்களும் அன்றாட வாழ்விலும் பணியிலும் தத்தளிக்கும் மனிதர்களின் கனவுகளும் காமமும் இவற்றில் வெளிப்படுகின்றன. அனுபவச் சிறப்பிலும் அருஞ்சொற்பிறப்பிலும் உருவான கவிதைகள் இவை.
தமிழுக்கும் தமிழ்க் கவிதைக்கும் ஆற்றலும் அறிவும் அழகும் புதுமையும் இக்கவிதைகள். தலைப்புச் சொல்வதுபோல ததும்புதலின் பெருங்கணங்கள் அல்ல இந்தக் கவிதைகள். அக்கணங்களையும் மீறித் தமிழுக்குப் புதுக்காற்றாய்த் ததும்புதலும் தயக்கமும் இல்லாமல் வருகிற கவிதைகள்.
கவிஞர் சேரன்
ISBN : 9789355234520
PAGES : 120