Your cart is empty.
தீரமிகு புது உலகம் (இ-புத்தகம்)
1932ஆம் வருடம் வெளியான ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘தீரமிகு புது உலகம்’ உலகின் மகத்தான நாவல்களின் வரிசையில் இடம்பெற்றுவருகிறது. 26ஆம் நூற்றாண்டில் நிகழ்வதாக எழுதப்பட்டுள்ள இந்த நாவலை அறிவியல் … மேலும்
1932ஆம் வருடம் வெளியான ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘தீரமிகு புது உலகம்’ உலகின் மகத்தான நாவல்களின் வரிசையில் இடம்பெற்றுவருகிறது. 26ஆம் நூற்றாண்டில் நிகழ்வதாக எழுதப்பட்டுள்ள இந்த நாவலை அறிவியல் புனைவு என்று சொல்லலாம். நாவல் காட்டும் வாழ்க்கையில் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது. உண்மை மாறுகிறது. மகிழ்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது. அதிகாரமும் தொழில்நுட்பமும் மக்கள் மனநிலையை நிர்வகிக்கக் கற்றுக்கொள்கின்றன. நம்மைச் சிந்திக்கவைத்துப் பதறவைக்கிறது இப்படைப்பு.
இதில் சொல்லப்படும் ‘சாதிய’ப் படிநிலையமைப்பு இந்த நாவலைத் தற்காலத்துக்கு மிகவும் பொருத்தமானதாக்குகிறது. தமிழில் ஜி. குப்புசாமியின் சரளமான மொழியாக்கத்தில், இப்போது உங்கள் கையில். இது வெறும் கற்பனை அல்ல; நம்முடைய எதிர்காலமாகக்கூட இருக்கலாம்.
ISBN : 9789355237255
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மீதி வெள்ளித்திரையில் ( இ-புத்தகம்)
-திரைப்படம் குறித்த தியடோர் பாஸ்கரனின் பார்வை விரிவும் நுட்பமும் கொண்டது. சமகால வாழ்வோடு திரைப்பட மேலும்
கேளிக்கை மனிதர்கள் (இ-புத்தகம்)
-படைப்பிலக்கியம் சார்ந்தே மிகுதியும் எழுதிவரும் அரவிந்தன் தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும் நிகழ்த மேலும்














