Your cart is empty.

திராவிட இயக்கமும் வேளாளரும்
திராவிட இயக்கம் வேளாளர் இயக்கமே என்ற கருதுகோளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் இந்நூல் சுயமரியாதை இயக்கத்தின் தோற்றத்தோடு பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கும் வேளாளருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டையும் மோதல்களையும் ஆராய்கின்றது. … மேலும்
திராவிட இயக்கம் வேளாளர் இயக்கமே என்ற கருதுகோளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் இந்நூல் சுயமரியாதை இயக்கத்தின் தோற்றத்தோடு பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கும் வேளாளருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டையும் மோதல்களையும் ஆராய்கின்றது. திராவிட இயக்கத்தின் சமூக அடித்தளம், கருத்தியல் உள்ளடக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கும் வழிசெய்கின்றது. கிடைப்பதற்கரிய அக்கால நூல்கள், இதழ்கள், கடிதங்கள், நாட்குறிப்புகள் முதலான ஆதாரங்களோடு வாதிடும் இந்நூல், தமிழகச் சமூக வரலாற்றுக்கும் சிந்தனை வரலாற்றுக்கும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பாகும். ஆ. இரா. வேங்கடாசலபதியின் விறுவிறுப்பான நடையில்...
ச. தமிழ்ச்செல்வன்
ச. தமிழ்ச்செல்வன் (பி. 1954) விருதுநகர் மாவட்டம், மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர். முன்னாள் ராணுவ வீரர். இவரது முதல் கவிதை 1972இல் கோவில்பட்டியில் வெளியான ‘நீலக்குயில்’ என்ற இலக்கிய இதழிலும், முதல் சிறுகதை 1978இல் ‘தாமரை’ இதழிலும் வெளியாகின. கட்டுரை, சிறுகதைத் தளங்களில் இயங்கி வருபவர்; இடதுசாரி அரசியல் செயல்பாட்டாளர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் உள்ளார். ‘வெயிலோடு போய் . . .’ இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. சிவகாசியில் வசிக்கிறார்.
ISBN : 9789355230735
SIZE : 0.0 X 0.0 X 0.0 cm
WEIGHT : 0.0 grams