Your cart is empty.
ஆளண்டாப் பட்சி
பெருமாள்முருகனின் ஆறாவது நாவல் இது. சக மனிதரோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும்சவால். மனித உறவுகள் எத்தருணத்திலும் முறுக்கிக் கொள்ளலாம்; பிணையவும் செய்யலாம். அதற்குப் பெரும்காரணங்கள் … மேலும்
பெருமாள்முருகனின் ஆறாவது நாவல் இது. சக மனிதரோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும்சவால். மனித உறவுகள் எத்தருணத்திலும் முறுக்கிக் கொள்ளலாம்; பிணையவும் செய்யலாம். அதற்குப் பெரும்காரணங்கள் தேவையில்லை, அற்பமான ஒன்றே போதுமானது. கூட்டுக்குடும்பப் பிணைப்பிலிருந்து உறவுகளின் நிர்ப்பந்தத்தால் விடுபட்டுப் புலம்பெயர்ந்து வேற்றிடத்தில் நிலைகொள்ளும் உழவுக் குடும்பம் ஒன்றின் போராட்டமே இந்நாவல். மனிதர்களை அண்ட விடாத அதேசமயம் நல்லவர்களுக்கு உதவும் பண்பும் கொண்ட பிரம்மாண்டமான பறவையாகக் கொங்கு நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஆளண்டாப் பட்சியின் இயல்புகள் இந்நாவல் மாந்தர்கள் பலருக்கும் பொருந்திப் போகின்றன.
பெருமாள்முருகன்
பெருமாள்முருகன் (பி. 1966) படைப்புத்துறைகளில் இயங்கிவருபவர். அகராதியியல், பதிப்பு ஆகிய கல்விப்புலத் துறைகளிலும் ஈடுபாடுள்ளவர். அரசு கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்.
ISBN : 9789381969557
SIZE : 14.0 X 1.3 X 21.3 cm
WEIGHT : 276.0 grams