Your cart is empty.
ஆனந்தாயி
-ப. சிவகாமி எழுதியுள்ள ‘ஆனந்தாயிமேலும்
-ப. சிவகாமி எழுதியுள்ள ‘ஆனந்தாயி’ நாவலைத் தலித் படைப்பாக மட்டுமே வாசிக்க வேண்டிய அவசியமில்லை. நாவலில் சாதி பற்றிய குறிப்புகளோ அதுசார்ந்த ஒடுக்குமுறைகள் பற்றிய குறிப்புகளோ இல்லை. படைப்பாளியின் சாதி அடையாளம் தெரிந்த பின்னால் நாவலுக்குத் தரப்பட்ட அடையாளமாகவே தலித் நாவல் என்ற அடையாளம் இருக்கிறது. ஒரு பெண்ணின் வாழ்வே இந்நாவலின் மையம். இந்தியக் கிராமங்களில் நிலவும் சமூக அமைப்பு, குடும்ப அமைப்பு ஆகியவற்றூடாக இயங்கும் பெண்களின் அக, புறவுலகை இந்நாவல் சிறப்பாக எடுத்துவைத்திருக்கிறது. நாவலில் புலப்படும் வாழ்வு கிராமப்புற அடித்தட்டுப் பெண்கள் எவருக்கும் தொடர்புடையதுதான் என்றாலும் இந்த வாழ்வு தலித் கண்ணோட்டத்திலிருந்து எழுதப்பட்டிருக்கிறது என்பதில் இது முக்கியமான படைப்பாக மாறியிருக்கிறது. இந்திய வாழ்க்கையைப் பெண்பார்வையிலிருந்து அறிந்துகொள்வதற்கான சிறந்த ஆவணம் இந்நாவல்.
-ஸ்டாலின் ராஜாங்கம்
ISBN : 9789361105296
SIZE : 14.0 X 1.5 X 21.0 cm
WEIGHT : 280.0 grams













