Your cart is empty.
பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே இயல்பாகத் தோன்றும் ஈர்ப்பு உயிர்களின் ஆதாரமான உணர்வு. வாழ்வின் அமுதம். சாதியும் மதமும் இந்த அமுதத்தை விஷமாக்கி வருகின்றன. மதங்களுக்கிடையிலான விரோதம் மத எல்லைகளைக் கடந்த காதலையும் தீண்டி அதனைக் கருகச் செய்கின்றது. மதம் தாண்டிய காதலை இறைமைக்கு எதிராகக் காணும் பிற்போக்குத்தனமும் அத்தகைய காதலைப் போர் வியூகமாகக் காணும் மதவாதமும் சந்திக்கும் புள்ளியில் வெடித்துச் சிதறுகின்றன இளம் மனங்களின் களங்கமற்ற காதல்கள்.
அன்பைத் தாழிட்டு அடைக்க முடியாது என்கிறார் வள்ளுவர். பேதங்களில் ஊறிய மானுட மனம் சாதி, மத, வர்க்க எல்லைகளைக் கடந்த காதல்களுக்கு அந்தப் பெருமையை வழங்க மறுக்கிறது. காதலும் அரசியலாக மாறிச் சந்தி சிரிக்கும் காலகட்டத்தின் காதல்களை அடையாளம் காட்டுகிறது சல்மாவின் நாவல்.
ISBN : 9789355232229
SIZE : 139.0 X 1.0 X 215.0 cm
WEIGHT : 250.0 grams
சரோஜினி கனகசபை
25 Feb 2025
சல்மா எழுதிய ‘அடைக்கும் தாழ்’ நாவல் பற்றிய பார்வை
அடைக்கும் தாழ்– சாதி,மத வேறுபாடுகளை மீறிய காதல் திருமணங்களுக்கு எதிரான, வன்முறையான இந்தியச் சூழலைச் சித்தரிக்கும் சல்மாவின் நாவல்! காதலுக்கும் மதத்துக்கும் இடையேயான உறவுச் சிக்கலைப் புனைவாக எழுதியிருக்கிறார்.
மதங்கள் கடந்த காதல் உறவு விளைவிக்கும் பிரச்சனைகள் சொல்லித் தீராதவை. மிக நுணுக்கமான எழுத்தாக்கம். நூல் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று.
நன்றி: சரோஜினி கனகசபை Sarojini Kanagasabai
வாசிப்போம் - தமிழ் இலக்கியம் வளர்ப்போம் முகநூல் குழுமம்
முழுப்பதிவையும் வாசிக்க: https://www.facebook.com/share/p/15kP3YzRS8/?mibextid=wwXIfr
சுப்பிரமணி இரமேஷ் (கனலி இணைய இதழ்)
9 Oct 2024
சல்மா எழுதிய
அடைக்கும் தாழ் நாவல் பற்றிய மதிப்புரை
“புனைவும் எதார்த்தமும் இணை கோடுகளாக பிரதிக்குள் ஓடுகின்றன சல்மா இந்நாவலினூடாகச் ஊடாக சில உரையாடல்களை முன்னெடுத்திருக்கிறார்.
எந்தச் சூழலிலும் ஒரு பெண்ணே பாதிக்கப்படுபவளாக இருக்கிறாள் என்று அவர் கருதுகிறார். தன் அன்பை நிரூபிப்பதற்குக்கூட அவள்தான் மதம் மாற வேண்டியிருக்கிறது. எல்லாவற்றையுமே இந்நாவல் உரையாடலுக்கு எடுத்துக்கொள்கிறது. அவ்வகையில் தமிழுக்கு இந்நாவல் குறிப்பிடத்தக்க ஆக்கமாக இருக்கும்.”
முழு மதிப்புரையையும் வாசிக்க: https://www.facebook.com/photo/?fbid=1007410801399422&set=pb.100063915338705.-2207520000














