Your cart is empty.
அடியும் முடியும்
இறைவனின் அடியும் முடியும் காண இயலாதென்பது நம்பிக்கை. இறைவன் படைத்த எதனையும் எல்லை காண இயலாதென்பது உட்பொருள். இடையறாமல் முயன்றால் எப் பொருளாயினும் எல்லை காணலாம் என்பது … மேலும்
இறைவனின் அடியும் முடியும் காண இயலாதென்பது நம்பிக்கை. இறைவன் படைத்த எதனையும் எல்லை காண இயலாதென்பது உட்பொருள். இடையறாமல் முயன்றால் எப் பொருளாயினும் எல்லை காணலாம் என்பது ஆராய்ச்சி. ‘காலத்தொடு கற்பனை கடந்த’ கடவுளை வாழ்த்தும்போதும் காலத்தின் சாயல் படியாத கற்பனை இல்லை. கடவுளும் காலத்தைக் கடக்கவில்லை. ஆதிகவி வான்மீகி முதல் அண்மைக்காலப் புனைகதையாசிரியர் வரை அகலிகை கதையைத் தத்தம் காலத்தில் நின்று அணுகியுள்ளனர். இக்கதைகளினூடே மாறிவரும் கற்புநெறியைக் காணமுடிகிறது. கண்ணகி கதையின் வித்துகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. அவை சிலப்பதிகாரமாய், நாட்டுப்புறக் கதைப்பாடலாய்ப் பின்னர் விரிந்தன. சிலப்பதிகாரம் பற்றிய கண்ணோட்டம் காலந்தோறும் சூழல்தோறும் மாறிவருகிறது. இவற்றைக் கடந்து சிலப்பதிகாரச் செய்தியைக் காண வேண்டும். சுந்தரர் ‘திருநாளைப் போவார்’ எனக் காரணப்பெயர் மட்டுமே சுட்டுகிறார். நம்பியாண்டார் நம்பி சில வரலாற்றுக் குறிப்புகள் தருகிறார். சேக்கிழார் சேரிப் பின்புலத்தொடு கதையாக்குகிறார். கோபாலகிருஷ்ண பாரதியிடம் ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ சமய வரம்புக்குட்பட்டு வர்க்க முரண்பாட்டுக் கூறுகள் பொதிந்த நாடகமாகப் பரிணமிக்கிறது. இவ்வாறெல்லாம் கோட்பாட்டுக் கண்கொண்டு கைலாசபதி தமிழிலக்கியத்தில் காணும் சில கருத்து மாற்றங்களை இந்நூலில் அலசி ஆராய்ந்துள்ளார். அரைநூற்றாண்டுக்குப் பின்னும் ஆய்வுக் கூர்மை குன்றாத இக்கட்டுரைகள், கல்விப்புல வறட்டுத் தளத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு, தம் நடைநயத்தால் நம்மை வயப்படுத்துகின்றன. பா. மதிவாணன்
ISBN : 9789352440955
SIZE : 13.8 X 1.2 X 21.5 cm
WEIGHT : 286.0 grams