Your cart is empty.


அம்பேத்கர் கடிதங்கள்
அம்பேத்கரின் நேர்மையை, சமூக நீதிக்கான இச்சையை, மனிதர்களைப் படிக்கும் கலையை, அறம்கொண்ட … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: சிவசங்கர் எஸ்.ஜே. |
வகைமைகள்: புதிய வெளியீடுகள் |
அம்பேத்கரின் நேர்மையை, சமூக நீதிக்கான இச்சையை, மனிதர்களைப் படிக்கும் கலையை, அறம்கொண்ட சமூகக் கட்டமைப்பின் மீதான விருப்பை, புலமையை, விவேகத்தை, மனிதநேயச் சமயக் கொள்கையை, எல்லாவற்றிற்கும் மேலாக எளிமையான மனிதர்களை உயர்நிலைக்குக் கொண்டு வருவதன் மூலம் இவ்வுலகை மறுகட்டமைப்புச் செய்யும் அவரது நோக்கத்தை இக்கடிதங்களில் காண முடியும். தீவிரச் செயல்பாட்டில் ஈடுபடும் வலிமையின் இதயம் கொண்டவரை, ஒடுக்கப்பட்டோரின் விடுதலை வேண்டுபவரை, மாயைகளை உடைப்பவரை, நகைச்சுவை உணர்வும் பகடியும் கைவரப்பெற்ற மனிதரைக் காணமுடியும் இத்தொகுப்பில். எப்போதும் போராட்டத்திலேயே உழன்று கசப்பின் தழும்புகளைக் கொண்டிருந்தவர் அம்பேத்கர். அவரது மென்மையை, சாதி, மத, இன, பிரதேச, மொழி, பாலின வேறுபாடுகளைக் கடந்த மொத்த மனிதகுலத்திற்கான அவர் தரிசனத்தை, விலங்குகளின்பால்கூட நேசத்தைச் சுரந்த அவரது அன்பான இதயத்தை இக்கடிதங்களில் காண முடியும். அவரின் நெகிழ்ச்சியான சில முக்கியப் புள்ளிகளை இத்தொகுப்பில் தரிசிக்கலாம்.
ISBN : 9789355231956
SIZE : 14.0 X 2.1 X 21.5 cm
WEIGHT : 520.0 grams