Your cart is empty.
அறுவடை
ஆர். ஷண்முகசுந்தரம் எழுதியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களில் பல ‘குறுநாவல்’ என்னும் வரையறைக்குள் அடங்குபவை. அவற்றுள் ‘அறுவடை’க்கு முக்கியமான இடம் உண்டு. பத்தாண்டுக்கும் மேல் எழுதாமல் இருந்துவிட்டுக் … மேலும்
ஆர். ஷண்முகசுந்தரம் எழுதியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களில் பல ‘குறுநாவல்’ என்னும் வரையறைக்குள் அடங்குபவை. அவற்றுள் ‘அறுவடை’க்கு முக்கியமான இடம் உண்டு. பத்தாண்டுக்கும் மேல் எழுதாமல் இருந்துவிட்டுக் க.நா.சுவின் இடையறாத வற்புறுத்தலால் திரும்பவும் எழுத வந்த ஷண்முகசுந்தரம் ‘அறுவடை’யை எழுதினார். புதிதாக எழுதத் தொடங்கும் எழுத்தாளருக்குரிய உத்வேகமும் புதுமை செய்யும் உணர்வெழுச்சியும் ஒருங்கே அமையப்பெற்ற நாவலாக இது உருவாயிற்று. வட்டார மொழியும் வாழ்வியலும் இணைந்திருப்பதோடு மாந்தர்களின் மனப் போராட்டங்களை அவர் கையாண்டிருக்கும் விதமே இன்றைக்கும் இந்நாவலைப் புதுமையுடன் விளங்கச் செய்கிறது. அவரது எழுத்துக்களில் துலங்கும் ‘பெண் நோக்கு’ இந்நாவலில் வெளிப்படையாகத் தெரிகிறது. அதிகம் பேசப்பட்டிருக்க வேண்டிய இந்நாவல் குடத்துக்குள்ளிருந்து இப்போது வெளியுலகுக்கு வருகிறது. இனியேனும் இதன் வெளிச்சம் பரவ வேண்டும்.
ஆர். ஷண்முகசுந்தரம்
ஆர். ஷண்முகசுந்தரம் (1917 – 1977) திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டத்தில் உள்ள கீரனூர் என்னும் சிற்றூரில் பிறந்தவர். ‘மணிக்கொடி’ இதழில் சிறுகதை எழுத்தாளராக அறிமுகமானார். 1942இல் ‘நாகம்மாள்’ நாவலை எழுதினார். ‘பூவும் பிஞ்சும்’, ‘பனித்துளி’, ‘அறுவடை’, ‘தனிவழி’, ‘சட்டி சுட்டது’ உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களையும் பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார். வசன கவிதை, நாடகம், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்கியவர். ‘பதேர் பாஞ்சாலி’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களை மொழிபெயர்த்துத் தமிழுக்குத் தந்துள்ளார். ‘நாகம்மாள்’ மூலம் தமிழின் வட்டார நாவல் துறையைத் தொடங்கிவைத்த இலக்கிய முன்னோடி இவர். தன் தம்பி ஆர். திருஞானசம்பந்தத்துடன் இணைந்து பல்வேறு இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டார். ‘வசந்தம்’ என்னும் இலக்கிய இதழைப் பல்லாண்டுகள் நடத்தினார். புதுமலர் நிலையம் என்னும் பதிப்பகம், புதுமலர் அச்சகம் ஆகியவையும் இவர்கள் நடத்தியவை. இவரது மனைவி : திருமதி வள்ளியம்மாள்.
ISBN : 9788194395652
SIZE : 13.8 X 0.5 X 21.4 cm
WEIGHT : 130.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
அறுவடை
ஆர். ஷண்முகசுந்தரம் எழுதியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களில் பல ‘குறுநாவல்’ என்னும் வரையறைக்கு மேலும்