Your cart is empty.
வாடிவாசல்
ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும்கூட. புய வலு, தொழில் நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | தமிழ் கிளாசிக் குறுநாவல் |
ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும்கூட. புய வலு, தொழில் நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும். தான் போராடுவது மனித னுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்கவேண்டும் மாடு அணைபவன். அந்த இடத்தில் மரணம் தான் மனிதனுக்குக் காத்துக் கொண்டிருக்கும். காளைக்குத் தன்னோடு மனுஷன் விளை யாடுகிறான் என்று தெரியாது. அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை. அதை மையமாக வைத்துப் புனையப்பட்ட இந்தக் கதையில் ஜெல்லிக் கட்டு பற்றிய வர்ணனை தத்ரூப மாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நுட்பமாகவும்கூட. ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துப் பேச்சு வழக்கிலேயே முழுக்க முழுக்க எழுதப்பட்டது. படிக்கும்போது சிலிர்ப்பு ஏற்படுத்தும் கதை. Jallikkattu, the bull fight of Tamilnadu, is the central theme of this highly interesting short fiction.
சி.சு. செல்லப்பா
சி.சு. செல்லப்பா (1912 - 1998) பிறந்தது மதுரை மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு சொந்த ஊர் சின்னமனூர். சிறுகதை, நாவல், விமர்சனம், கவிதை, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் செல்லப்பா பங்களித்திருக்கிறார். சந்திரோதயம், தினமணி இதழ்களில் உதவியாசிரியராகப் பணியாற்றினார். இவரது முதன்மையான சாதனை எழுத்து இதழ். மிக மோசமான பொருளாதார நெருக்கடியைப் பொருட்படுத்தாமல் அந்த இதழைப் பத்தாண்டுகளுக்கும் மேல் கொண்டுவந்தார். பரிசு, பணம், புகழ் ஆகியவற்றைக் கண்டு மிரளக் கடைசிவரையிலும் மறுத்த படைப்பாளி அவர். புகைப்படம் எடுப்பதில் செல்லப்பாவுக்குத் தனி ஈடுபாடு உண்டு. ஜல்லிக்கட்டுப் பற்றித் தமிழில் வெளிவந்த முதல் படைப்பு என்று ‘வாடிவாச’லைக் குறிப்பிடலாம்.
ISBN : 9788187477525
SIZE : 11.9 X 0.6 X 18.0 cm
WEIGHT : 115.0 grams
நிஷாந்தினி வடிவேல்
19 Mar 2026
சி.சு. செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ கிளாசிக் குறுநாவல்
வாசிப்பு அனுபவம்
”வாடிவாசலின் நேரடிச் சாட்சியாய் வாசகர்”
…இதுவரை ஜல்லிக்கட்டை நேரில் கண்டதில்லை. ஆனால் வாசித்த பிறகு பார்க்க வேண்டும் என்று தோன்றியது. கதையைப் படித்த பின்பு அத்தனை காணொளியைத் தேடிக் கண்டேன்…
நன்றி: நிஷாந்தினி வடிவேல் (இன்ஸ்டாக்ராமிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.instagram.com/p/DWEA9SBlLdh/...
சுஜாதா செல்வராஜ் (முகநூலிலிருந்து)
25 Mar 2026
அனுமதியை மீறி பக்கத்து வீட்டிலிருந்து தாவி ஏறி மாடி நிறைய திமிரும் மக்கள் கூட்டமும், ஆறிப்போன பொங்கலைத் தின்றபடி என் வீட்டில் எனக்கே நின்று வேடிக்கைப் பார்க்க இடமில்லையா என்ற பெருமிதம் கலந்த அங்கலாய்ப்பும் என்று என் நினைவில் சேகரமாகியுள்ள ஜல்லிக் கட்டு வேறு. அசலான ஜல்லிக்கட்டு இந்த வாடி வாசல் நாவலில் இருக்கிறது…
ஜல்லிக்கட்டைப் பற்றியே அதிகப் பக்கங்களுக்கு விவரணைகள் உள்ள இந்நாவலில் ஆசிரியர் போகிற போக்கில் மனித மனங்களின் இயங்கு திசையை,அதன் நிறங்களை அழகாகச் சொல்லிச் செல்கிறார்
Jallikkattu, the bull fight of Tamilnadu, is the central theme of this highly interesting short fiction.<\p>
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது ( இ-புத்தகம்)
-1921-1939 காலகட்டத்தில் வ.வே.சு. ஐயர், அ. மாதவையா. றாலி, பி.எஸ். ராமையா, கல்கி, எம்.எஸ். கல்யாணச மேலும்





