Your cart is empty.
பாகீரதியின் மதியம்
பாகீரதியின் கனவிற்கு வெளியே ஜெமினிக்கு நிஜத்தில் வேறொரு பெயர் இருக்கிறது, உறங்காப் புலி. ஜெமினியின் தாயாருடைய ஆசையால் சங்கிலிக்கு வேறொரு பெயர் உண்டானது, ஜெமினி. சவிதாதேவியின் சித்தப்பிரமைக்கு … மேலும்
பாகீரதியின் கனவிற்கு வெளியே ஜெமினிக்கு நிஜத்தில் வேறொரு பெயர் இருக்கிறது, உறங்காப் புலி. ஜெமினியின் தாயாருடைய ஆசையால் சங்கிலிக்கு வேறொரு பெயர் உண்டானது, ஜெமினி. சவிதாதேவியின் சித்தப்பிரமைக்கு அப்பால் விபின் பாஸ்வானுக்கு வேறொரு பெயர் இருக்கிறது, உறங்காப்புலி. சில்லரைச் சாகஸங்களுக்கு வெளியே குடுமிநாதனின் பெயர் வாசுதேவன். ப்ராம் ஸ்டோக்கரின் உள்ளூர்க் கதை வடிவத்தில் ட்ராகுலாவின் பெயர் அரங்கநாதன் நம்பி. உபேந்திரநாத் தத்தாவின் கனவிற்கு அப்பால் பினித்ரா தேவிக்கான பூர்வப் பெயர் பேராபுடீமா. பேராபுடீமா சுயசாவை நிகழ்த்திக்கொள்வதற்கு முன்னால் தெக்கூவாக அறியப்பட்டவள். உறங்காப்புலியின் காதலின் பரவச உலகிற்கு வெளியே பாகீரதிக்குமேகூட இன்னொரு பெயர் இருக்கிறது, சவிதாதேவி. அரங்கநாதன் நம்பியினுடைய பூர்வ ஜென்மத்துப் பெயரறியாக் காதலியின் இந்த ஜென்மத்துப் பெயர் பாகீரதி. பெயர் பெயர்களை உற்பத்தி செய்துகொண்டேயிருக்கிறது என்கிறார் அரங்கநாதன் நம்பி. “பெயர் ஒரு வித்தைக்காரனின் தொப்பி. அதிலிருந்து வெளிவரும் எதுவும் உண்மையில்லை. அவை ஏதேதோ எண்ணங்களின் நோக்கங்களின் ஆரூடங்களின் திட்டங்களின் சித்திரவதைகளின் உருவகங்கள். அது வெறும் ஒரு சொல். சீஸேமைத் திறக்க வைக்கும் ஒரு கடவுச் சொல்.”
பா. வெங்கடேசன்
பா. வெங்கடேசன் எண்பதுகளின் இறுதியில் எழுதத் தொடங்கிய பா. வெங்கடேசன் மதுரையில் பிறந்து கல்லூரிக் காலம் வரை அங்கேயே வளர்ந்தவர். கவிதைகள், குறுங்கதைகள், சிறுகதைகள், சிறு புதினங்கள், புதினங்கள், படைப்பாய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் ஆகியவை நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு இவருடைய பங்களிப்புகள். படைப்பிலக்கியத்திற்கான புதுமைப்பித்தன் நினைவு விருது - 2017 (‘விளக்கு’, அமெரிக்கா), ஸ்பாரோ இலக்கிய விருது - 2018 (‘ஸ்பாரோ’, மும்பை), தமிழ் திரு விருது - 2019 (‘இந்து தமிழ்’, சென்னை) ஆகிய விருதுகளைப் பெற்றவர். மனைவி, இரண்டு மகன்களுடன் பணி நிமித்தமாக இப்போது ஒசூர்வாசி.
ISBN : 9789352440160
SIZE : 14.0 X 3.6 X 21.5 cm
WEIGHT : 770.0 grams