Your cart is empty.
பாரதி: 'விஜயா' கட்டுரைகள்
பாரதி ஆசிரியராக விளங்கிய ஒரே நாளேடு ‘விஜயா’. 1909-1910இல் புதுச்சேரியிலிருந்து வெளியான இந்த நாளேடு, பாரதி நடத்திய பத்திரிகைகளின் குரல்வளை நசுக்கப்படவிருந்த தருணத்தில் அவருடைய எண்ணங்களையும் மனவோட்டங்களையும் … மேலும்
பாரதி ஆசிரியராக விளங்கிய ஒரே நாளேடு ‘விஜயா’. 1909-1910இல் புதுச்சேரியிலிருந்து வெளியான இந்த நாளேடு, பாரதி நடத்திய பத்திரிகைகளின் குரல்வளை நசுக்கப்படவிருந்த தருணத்தில் அவருடைய எண்ணங்களையும் மனவோட்டங்களையும் படம்பிடித்துக் காட்டுகின்றது. இதுவரை ஓரிதழ்கூட முழுமை யாகக் கிடைக்காத ‘விஜயா’வின் பல இதழ்களைப் பெரு முயற்சி செய்து பாரீசில் கண்டுபிடித்து, இந்நூலைச் செப்ப மாகப் பதிப்பித்திருக்கிறார் ஆ.இரா. வேங்கடாசலபதி. கிடைக்கப் பெறாத ‘விஜயா’ இதழ்களின் உள்ளடக்கமும் அன்றைய அரசின் இரகசிய ஆவணங்களிலிலிருந்து திரட்டித் தரப்பட்டுள்ளது. இதுவரை கிடைக்கப்பெறாத ‘இந்தியா’ இதழ்க் கட்டுரைகளும், பாரதி தன் இறுதிக் காலத்தில் பங்கெடுத்துக்கொண்ட ஒரு பிராமண சபைக் கூட்டம் பற்றிய ஓர் அரிய ஆவணமும் நூலில் இடம் பெற்றுள்ளன.
ISBN : 9788187477938
SIZE : 13.8 X 2.0 X 21.4 cm
WEIGHT : 490.0 grams