-தமிழில் பல்வேறு அம்சங்களைப் போலவே சுயசரிதை எழுத்திலும் பாரதி ஒரு முன்னோடி. உரைநடையிலும் கவிதையிலும் அவர் தனது வாழ்வைப் பதிவுசெய்துள்ளார். புனைவு வடிவில் எழுதிய (முற்றுப்பெறாத) ‘சின்னச் சங்கரன் கதை’யினையும் ‘கனவு’ என்ற கவிதை வடிவில் அமைந்த சுயசரிதையினையும் கவனப்படுத்துகிறது இந்நூல். ‘கனவு’ கழிவிரக்கம் மிகுந்த பிரதியாக உள்ளது. ‘சின்னச் சங்கரன் கதை’ தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்து நிற்கும் அற்புதமான நகைச்சுவை எழுத்தாக மிளிர்கிறது.
பாரதியியலுக்கு முக்கியப் பங்காற்றிவரும் ஆ.இரா.வேங்கடாசலபதி இவ்விரு பிரதிகளையும் தொகுத்தளித்து விரிவான முன்னுரையை எழுதியிருக்கிறார். இந்தப் பிரதிகளின் முக்கியத்துவத்தையும் அவற்றின் நுட்பங்களையும் இந்த நூலின் மூலம் உணரலாம்.