Your cart is empty.
-பாரம்பரிய கலைவளம் மிகுந்த ஒரு பண்பாட்டுச் சூழலில் முற்றிலும் ஒரு புதிய கலைவடிவமாகத் தோன்றிய சினிமாவைத் தமிழ் எழுத்தாளர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள்? ஒரு பிரம்மாண்டமான பண்பாட்டுச் சக்தியாக சினிமா உருவானபோது, எழுத்தாளர்கள் அதை எவ்வாறு அணுகினார்கள்? அவர்கள் பார்வையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? தமிழ் சினிமாவிற்குச் சிறுபத்திரிகைகளின் பங்களிப்பு என்ன? 1935 முதல் இன்றுவரை பல்வேறு இதழ்களிலும் நூல்களிலும் வெவ்வேறு கருத்தியல் போக்குகளைக் கொண்ட கட்டுரைகள் அடங்கிய இந்த நூல் இத்தகைய கேள்விகளை எதிர்கொள்கிறது.
தியடோர் பாஸ்கரன் தமிழ்த் திரைப்பட வரலாறு பற்றிய முன்னோடி ஆய்வுகள் செய்திருப்பவர். இத்துறையில் ஆங்கிலத்தில் இரண்டு நூல்களும் தமிழில் ஒரு நூலும் எழுதியிருக்கிறார். ஆராய்ச்சி இதழ்களிலும் வெகுஜன ஊடகங்களிலும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். சினிமா பற்றிய சிறந்த நூலுக்கான குடியரசுத் தலைவரின் தங்கத்தாமரை (1996) விருது பெற்றிருக்கிறார்.
ISBN : 978-81-87477-75-4
SIZE : 14.0 X 3.0 X 21.4 cm
WEIGHT : 0.35 grams