Your cart is empty.
சொப்பனவாழ்வில் மகிழ்ந்தே . . .
வெகுகாலமாக செவிவழிச் செய்திகளாலும் அச்சேறிய தரவுகளாலும் மட்டுமே புனையப்பட்டிருந்த தமிழ் சினிமா வரலாற்றை ஆய்வியல் பண்புகளுடன் வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் உருவாக்கியவர் தியடோர் பாஸ்கரன். ஒரு … மேலும்
வெகுகாலமாக செவிவழிச் செய்திகளாலும் அச்சேறிய தரவுகளாலும் மட்டுமே புனையப்பட்டிருந்த தமிழ் சினிமா வரலாற்றை ஆய்வியல் பண்புகளுடன் வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் உருவாக்கியவர் தியடோர் பாஸ்கரன். ஒரு வரலாற்றாளராக பாரபட்சம் ஏதுமின்றி எவ்வகைப் படமாக இருந்தாலும் அதன் சான்றுகளை ஒழுங்குபடுத்துகிற அதே சமயத்தில், சினிமா மொழியை உணர்த்தும் படைப்புகளையே உன்னதமாகக் கருதும் கறாரான விமர்சகராகவும் செயல்பட்டு வருகிறார். முழுமையான சினிமா பார்வையின் இவ்விரு போக்குகளையும் இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் காணலாம். தமிழ்த் திரையில் காட்டுயிர், தமிழ்த் திரையியல் ஆய்வுக்கு மேலை ஆய்வாளர்களின் பங்கு, தென்னிந்திய சினிமாவின் தொழிற்சங்க இயக்கம் போன்ற முன்னோடித்தன்மை கொண்ட ஆய்வுகளுடன் தியடோர் பாஸ்கரனுடனான நேர்காணலும் இந்நூலின் சிறப்பம்சங்கள்.
ISBN : 9789382033189
SIZE : 13.8 X 1.0 X 21.3 cm
WEIGHT : 210.0 grams
Theodore Bhaskaran, the well-known scholar of films, has written seminal works about the history of Tamil films. Many interesting interviews have been included in the annexure.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ஒருத்தி
-அம்ஷன் குமார் நம்முடைய சூழலின் பிரத்யேக வாழ்க்கை நிலை மற்றும்
நிலவெளி குறித்த உணர்வுடன் மேலும்
சினிமா கொட்டகை
இசை, நடனம், நாடகம் போன்ற பாரம்பரிய நிகழ்கலைகள் போலல்லாமல், சினிமா முற்றிலும் தொழில்நுட்பத்தை சார் மேலும்






