Your cart is empty.
சோழ அரசும் சமூகமும்
-உலக அளவில் மதிக்கப்படும் பேராசிரியர் எ. சுப்பராயலு கல்வெட்டியலிலும் … மேலும்
-உலக அளவில் மதிக்கப்படும் பேராசிரியர் எ. சுப்பராயலு கல்வெட்டியலிலும் தொல்லியலிலும் வல்லுநர். சோழர் கால வரலாறு, தென்னிந்தியாவின் சமூக-அரசியல், புவியியல் ஆகியவை குறித்த ஆய்வுகளில் தலையாய பங்களிப்புகளைச் செய்திருப்பவர். பெருமணல், வல்லம், பெரியபட்டினம் ஆகிய இடங்களில் இவர் நடத்திய அகழாய்வுகள் முக்கியமானவை.
சோழர் கால வரலாற்றாய்வில் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரிக்குப் பிறகு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியவை சுப்பராயலுவின் ஆய்வுகள். இவரது ஆய்வுகள் அரசர்களையும் போர்களையும் தாண்டி, சமூகப் பொருளியலின் பின்னணியில் தமிழக வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
இந்த நூல் சோழ அரசின் நிர்வாகம், அக்காலக் குடிமைச் சமூகம், வேளாண்மை, மக்கள் பண்பாடு, தொழிலாளர்களின் நிலை, அப்போது நிலவிய அடிமைமுறை முதலானவற்றை ஆதாரப்பூர்வமாக எடுத்துக்கூறுவதுடன், அறிவியல் கண்ணோட்டத்தில் ஆய்ந்து பல முடிவுகளையும் முன்வைக்கிறது.
ISBN : 9789361101328
SIZE : 14.0 X 1.0 X 21.0 cm
WEIGHT : 180.0 grams













