Your cart is empty.


சினிமா கொட்டகை
இசை, நடனம், நாடகம் போன்ற பாரம்பரிய நிகழ்கலைகள் போலல்லாமல், சினிமா முற்றிலும் தொழில்நுட்பத்தை சார்ந்த ஒன்று. அது மட்டுமல்ல இவைகளுள் மிகவும் இளையதும் சினிமாதான். ஆனால் ஆரம்பமுதல் … மேலும்
இசை, நடனம், நாடகம் போன்ற பாரம்பரிய நிகழ்கலைகள் போலல்லாமல், சினிமா முற்றிலும் தொழில்நுட்பத்தை சார்ந்த ஒன்று. அது மட்டுமல்ல இவைகளுள் மிகவும் இளையதும் சினிமாதான். ஆனால் ஆரம்பமுதல் அரசும், அறிவுலகமும், கல்விப்புலமும் இதை உதாசீனம் செய்ததால் அதன் சிறப்பு இயல்புகள் சரியாக கவனிக்கப்படவில்லை. ஒரு சீரிய கலை வடிவம் ஒரு பொழுதுபோக்கு சாதனமாக உறைந்து விட்டது.இந்த தொகுப்பிலுள்ள கட்டுரைகள் தமிழ்சினிமாவின் சில பரிமாணங்களை அவதானிக்கின்றன. அத்துடன், மௌன யுகத்தின் நிர்ப்பந்தங்கள் எவ்வாறு தமிழ்த்திரையின் அம்சங்களை உருவாக்கின? பாட்டு, நடனம் நம் திரைப்படங்களில் பிரதானமாக இடம் பெற்றது எப்படி, இந்திய, தமிழக வரலாறு ஒரு திரைக்கதைச் சுரங்கம் போன்றிருந்தாலும் வெகு சில வரலாற்றுப்படங்களே தமிழில் உருவாக்கம் பெற்றிருப்பது ஏன் போன்ற கேள்விகளையும் இந்நூல் எழுப்புகின்றது.இன்று அழகியலிலும், வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் தமிழ்சினிமாவில் ஒரு புத்தாக்கம் தெரிகின்றது. சில இயக்குநர்கள் சினிமா மொழியை கையாளுவதிலும், கதை சொல்லல் முறையிலும் ஒரு மேம்பாட்டை பதிவு செய்துள்ளனர். ஆயினும் ஒரு சமுகத்தின் சினிமாவிற்கு இயக்குநர், தயாரிப்பாளர் மட்டும் பொறுப்பல்லர். திரைபற்றி எழுதுபவர்கள், படிப்பவர்கள், சிந்திப்பவர்கள் இவர்களுக்கும் பொறுப்பிருக்கின்றது என்பது இந்நூலாசிரியரின் நம்பிக்கை.
ISBN : 9789386820938
SIZE : 13.9 X 0.7 X 21.4 cm
WEIGHT : 160.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ஒருத்தி
-அம்ஷன் குமார் நம்முடைய சூழலின் பிரத்யேக வாழ்க்கை நிலை மற்றும்
நிலவெளி குறித்த உணர்வுடன் மேலும்
சினிமா கொட்டகை
இசை, நடனம், நாடகம் போன்ற பாரம்பரிய நிகழ்கலைகள் போலல்லாமல், சினிமா முற்றிலும் தொழில்நுட்பத்தை சார் மேலும்