Your cart is empty.
என் சரித்திரம்
உ.வே. சாமிநாதையர் ‘ஆனந்த விகட’னில் தொடராக எழுதிய நூலாயிற்று. பலமுறை அச்சாகியுள்ள இந்நூலின் செம்பதிப்பு இது. இதழில் வெளியான தொடரின் மூல வடிவு, அதில் இடம்பெற்ற படங்கள், … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | தமிழ் கிளாசிக் வாழ்க்கை வரலாறு | வரலாறு |
உ.வே. சாமிநாதையர் ‘ஆனந்த விகட’னில் தொடராக எழுதிய நூலாயிற்று. பலமுறை அச்சாகியுள்ள இந்நூலின் செம்பதிப்பு இது. இதழில் வெளியான தொடரின் மூல வடிவு, அதில் இடம்பெற்ற படங்கள், அரிய தேடலால் கிடைத்த புதிய படங்கள், ‘என் ஆசிரியப்பிரான்’ இணைப்பு, பொருளடைவு என இன்றைய வாசகருக்குப் பயன்படும் பல அம்சங்களை இப்பதிப்பு கொண்டிருக்கிறது. தன் வரலாற்றுக்கு வகைமாதிரியாக விளங்கும் இந்நூல் தமிழ்ப் புலமை வரலாறு, சமூக வரலாறு, கல்வி வரலாறு, உரைநடை வரலாறு, பதிப்பு வரலாறு உள்ளிட்டவற்றிற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருக்கிறது. பல்வேறு நுட்பங்களையும் உள்ளடுக்குகளையும் கொண்டு பயில்வோருக்குப் புதுப்புதுக் கோணங்களைக் காட்டியபடி காலத்திற்கேற்பப் புதிதாகி மிளிர்ந்தகொண்டேயிருக்கும சிறப்புடையது இந்நூல். தமிழ் மறுமலர்ச்சி பெற்ற காலத்தில் ஆதாரப் பதிவுகளோடு மிக எளிதாகவும் ஆர்வத்துடனும் வாசிப்பதற்கேற்ற மொழிநடையில் எழுதப்பட்டிருக்கும் தமிழ்ச் சாதனையாகிய இந்நூலை வாசிப்பது மட்டுமல்ல, இதனோடு உறவாடுவதும் தமிழர் கடமை. - பெருமாள்முருகன்
ISBN : 9789352440962
SIZE : 16.1 X 5.7 X 23.8 cm
WEIGHT : 1400.0 grams