பாலியல் தொழிலாளியான நளினி ஜமீலா, அவரது தன் வரலாற்றின் மூலம் கேரளப் பண்பாட்டு உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். மலையாளிகளின் தனி வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் நிலவும் கலாச்சாரப் பாசாங்கையும் போலி ஒழுக்கச் சார்பையும் அம்பலப்படுத்தினார்.
‘எனது ஆண்கள்’ நளினியின் வரலாற்றில் மேலும் சில அத்தியாயங்களைப் பகிரங்கப்படுத்துகிறது. பெண்கள் மீதான ஆண்களின் கண்ணோட்டத்தையும் அணுகுமுறைகளையும் தனது சொந்த அனுபவத்தின் பின்னணியில் இந்த நூலில் எடுத்துக்காட்டுகிறார். இது நளினி ஜமீலாவின் வாக்குமூலம் மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் கோணல்களையும் கபடங்களையும் அப்பட்டமாக விவாதிக்கும் தார்மீக அறிக்கையும் ஆகும்.
ISBN : 9789355231574
SIZE : 13.6 X 0.8 X 21.4 cm
WEIGHT : 200.0 grams
அன்புச் செல்வன் (முகநூலிலிருந்து)
2 Mar 2026
நளினி ஜமீலாவின் சொந்த வாழ்க்கையில் அவரை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பாதித்த ஆண்களைப் (அவர்களில் பாலியல் ரீதியாக அவரை அணுகிய வாடிக்கையாளர்களே அதிகம்) பற்றிய குறிப்புகளே இந்த நூல். கேரளப் பண்பாட்டுச் சூழலிலும் சமூக வாழ்விலும் உள்ள பொய்யான ஒழுக்க வாதத்தையும் பண்பாட்டுப் போலித்தனத்தையும் கட்டவிழ்த்துக் காட்டுவதை உபரி விளைவாகக் கொண்டிருக்கிறது இப்பிரதி.
நூலின் மிக முக்கியமான பகுதியாக நான் கருதுவது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பான 'காதலுக்கு வயதில்லை' என்ற பகுதியேயாகும். பிம்பம் (Image) பற்றிய புரிதல், கிரிமினல்களின் உருவாக்கம், தூய்மை/சுத்தம் குறித்த கருத்தியல், வாழும் இடத்தை வைத்து மனிதர்களை மதிப்பிடுதல், காதல், பெண்ணியம் என்று இந்தப் பகுதியில் அவர் அளித்துள்ள பதில்கள் மிகவும் நுட்பமானதும் அனுபவ முதிர்ச்சி கொண்ட தெளிந்த அரசியல் பார்வையும் உடையதாக உள்ளன