-செ. முஹம்மது யூனூஸ் 43 ஆண்டுகளுக்கு முன்னால் பர்மாவிலிருந்து ஹாங்காங்கிற்குப் புலம் பெயர்ந்தவர். அதற்கு முன்னர், அவர் பிறந்து, வளர்ந்து 42 ஆண்டுகள் வாழ்ந்த, ‘பர்மியத் திருநாட்'டைப் பற்றி இந்த நூலில் சொல்கிறார். தமிழர்கள் பர்மாவில் செல்வாக்கோடு வாழ்ந்த காலத்தில் தொடங்குகின்றன இப்பதிவுகள். இரண்டாம் உலகப்போர், ஜப்பானிய ஆக்கிரமிப்பு, நேத்தாஜியின் இந்திய சுதந்திர லீக், பர்மீயர்களின் விடுதலை, ராணுவ ஆட்சி, இந்தியர்கள் நேரிட்ட வாழ்வுரிமைச் சிக்கல்கள் என்று தொடரும் பதிவுகள், கணிசமான இந்தியர்கள் பர்மாவிலிருந்து வெளியேற நேர்ந்ததுவரை நீள்கிறது. யூனூஸின் குறிப்புகள் பர்மீயத் தமிழர்களின் வாழ்வு, கலாச்சாரம், கலை, இலக்கியம் அனைத்தையும் தொட்டுச் செல்கிறது. தான் வாழ்கிற சமூகத்தைக் குறித்த அக்கறையும், சக மனிதர்கள்மீது எல்லையற்ற நேசமும்கொண்ட யூனூஸின் பதிவுகள், ஒரு காலகட்டத்தின் சமூக வாழ்வையும் வரலாற்றையும் ஒரு சேரச் சொல்லிச் செல்கிறது.
Turn on screen reader support
To enable screen reader support, press Ctrl+Alt+Z To learn about keyboard shortcuts, press Ctrl+slash