Your cart is empty.
ஜீவ வாக்கு : பாரதி மொழிபெயர்த்த ஜகதீச சந்திர போஸ் உரை
-உலக இலக்கியங்களைச் சிறுசிறு மொழிபெயர்ப்பு களாலும் கட்டுரைகளாலும் அறிமுகப்படுத்திய … மேலும்
-உலக இலக்கியங்களைச் சிறுசிறு மொழிபெயர்ப்பு களாலும் கட்டுரைகளாலும் அறிமுகப்படுத்திய பாரதி, வங்காளத்தின் இலக்கிய, அரசியல் முன்னோடிகளின் கவிதை, கதை, கட்டுரை, உரைகளை மிகுதியாகத் தமிழாக்கியுள்ளார்.
பங்கிம் சந்திரரின் பாடல், அரவிந்தரின் கவிதை, தாகூரின் எழுத்துகள் எனப் பலவற்றையும் மொழிபெயர்த்த பாரதி, அறிவியல் அறிஞர் ஜகதீச சந்திர போஸின் வரலாற்றுப் பெருமை கொண்ட சொற்பொழிவு ஒன்றையும் மொழிபெயர்த்திருக்கிறார். அந்தத் தமிழாக்கம் ‘ஜீவ வாக்கு’ என்னும் பெயரில் 1918இல் சிறுநூலாக வெளிவந்தது.
இந்நூல் இப்பொழுது ‘சுதேசமித்திரன்’, ‘மாடர்ன் ரிவ்யூ’ முதலிய நூற்றாண்டுப் பழைமைவாய்ந்த இதழ்களிலிருந்து தேடிக் கண்டறிந்த அரிய ஆதாரங்களால், மூல வடிவங்களால் நம்பகமான ஆராய்ச்சிப் பதிப்பாக உருப்பெற்றுள்ளது. இந்நூலை ஆய்வும் பதிப்புமாக உருவாக்கியுள்ளார் நம் காலத்தின் பாரதி அறிஞர் ய. மணிகண்டன்.
ISBN : 9789361105104
SIZE : 14.0 X 0.5 X 21.0 cm
WEIGHT : 0.8 grams













