Your cart is empty.
காஃப்காவின் நாய்க்குட்டி
நாம் ஒவ்வொருவருமே பொன், பொருள், புகழ், தத்துவம், விடை என்று ஏதோ ஒன்றைத் துரத்தியபடி ஓடிக்கொண்டிருக்கிறோம். அவ்வோட்டத்தையே வாழ்வென நம்பவும் செய்கிறோம். அவ்விதமாகவே இந்நாவலின் மையப் பாத்திரங்களும் … மேலும்
நாம் ஒவ்வொருவருமே பொன், பொருள், புகழ், தத்துவம், விடை என்று ஏதோ ஒன்றைத் துரத்தியபடி ஓடிக்கொண்டிருக்கிறோம். அவ்வோட்டத்தையே வாழ்வென நம்பவும் செய்கிறோம். அவ்விதமாகவே இந்நாவலின் மையப் பாத்திரங்களும் தாங்கள் அவாவுற்ற ஒன்றின்பொருட்டு அல்லலுற்று அலைகிறார்கள். அத்தேடலின் கதை புதுச்சேரியிலும், யாழ்ப்பாணத்திலும் தொடங்கி, பிரான்ஸில் வளர்ந்து, செக் குடியரசில் முடிகிறது. தேடியலைந்ததைக் கண்டடைந்தார்களா? அதற்காக அவர்கள் கொடுத்த விலை எவ்வளவு? அடைந்த கணத்தில் அவ்வாசைகளின் மதிப்பென்ன? என்பதான கேள்விகளுடன், கதை முடியுமிடத்திலிருந்து ஒரு வாசகன் தனக்குள் தேடத் தொடங்கினால் அதுவே இந்நாவலின் வெற்றி. This is the fourth Novel from renowned writer translator Nagarathinam Krishna. The title and theme of the novel are inspired from Kafka’s short story Investigations of a dog and the novelist’s visit to Kafka’s house in Prague. The novel is comprised of journeys made by its characters both inwards and outwards. The stories start from Puducherry, Yaazpanam and through France end up at the Czech republic. We are all running behind materialistic or philosophical quests; The novel inspires the reader to question the meaning of it all.
நாகரத்தினம் கிருஷ்ணா
புதுச்சேரியைப் பூர்வீகமாகக்கொண்ட நாகரத்தினம் கிருஷ்ணா இருபத்தைந்து ஆண்டுகளாக பிரான்சு நாட்டின் கிழக்கில் ஸ்ட்ராஸ்பூர் நகரில் வசித்துவருகிறார். சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் சொந்தமாக வணிகம் நடத்திவருவதோடு, ஆங்கிலம் - பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளராகவும் செயல்பட்டுவருகிறார். நவீன பிரெஞ்சு இலக்கியத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர். தமிழில் மூன்று நாவல்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், பிரெஞ்சிலிருந்து ஆறு மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன.
ISBN : 9789384641214
SIZE : 13.8 X 2.0 X 21.5 cm
WEIGHT : 344.0 grams