Your cart is empty.
கன்னிமார் சாமி
-மேலும்
-சுஜாதா செல்வராஜின் இந்தக் கதைகள் பெண்களின் நடைமுறை வாழ்க்கையின் அவலங்களைக் கூறுபவை. பெண்களின் வாழ்க்கையைத் தனித்துக் காணாமல் மனித வாழ்வின் பரந்த பின்னணியில் வைத்துப் பார்க்கிறார் சுஜாதா. குறிப்பிட்ட ஒரு சோகத்தைக் கூறும்போது, அதன் பின் உள்ள வரலாற்றுச் சோகத்தையும் பார்க்கவைக்கிறார்.
சுஜாதா அடிப்படையில் கவிஞர். அவருடைய கவித்துவச் செறிவு கதைகளைக் கச்சிதமாகக் கட்டமைக்க உதவுகிறது. பல்வேறு அனுபவங்களையும் உணர்வுகளையும் சொல்லும் இவருக்குச் சிலவற்றைச் சொல்லாமல் விடுவதன் முக்கியத்துவமும் தெரிந்திருக்கிறது. தன் படைப்புத்திறனில் நம்பிக்கை உள்ளவர்களாலேயே சில விஷயங்களைச் சொல்லாமலேயே உணர்த்த முடியும். அத்தகைய நம்பிக்கை உள்ள படைப்பாளி களில் ஒருவர் சுஜாதா செல்வராஜ்.
ISBN : 9789361104978
SIZE : 14.0 X 0.5 X 21.0 cm
WEIGHT : 160.0 grams
பா. கண்மணி
28 Jan 2026
சுஜாதா செல்வராஜின் ‘கன்னிமார் சாமி’ சிறுகதைகள்
”பெண்ணால் மட்டுமே உணரக்கூடிய வலிகளின் கதைகள்”
எழுத்தாளர் பா. கண்மணியின் வாசிப்பு அனுபவம்
தொகுப்பைப் படிக்கத் துவங்கியதுமே, க்ராப் சர்ட்டுடன் வலம் வரும் சுஜாதாவுக்குள் இத்தனை தத்ரூபமான கிராமங்களா என வியந்தேன். தமிழில் சிறுவர்கள் அளவிற்கு சிறுமிகள் எழுதப்படவில்லை என்கிற குறையை, தொகுப்பிலிருக்கும் கால்வாசிக் கதைகள் தீர்த்து வைக்கின்றன. இயல்பான வசனங்களும் சரளமான நடையும் எடுத்த புத்தகத்தை வைக்க விடவில்லை…
..ஒரு பெண்ணால் மட்டுமே உணரக்கூடிய வலிகளில் துணிவோடு வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறீர்கள் … …எழுதுங்கள் சுஜாதா. நம் கதையை நாம் தானே அசலாக சொல்லமுடியும். நீங்கள் வளர்ந்த கிராமத்திலிருந்து நகர்ந்து, படித்த சிறு நகரத்தையும் வாழ்ந்து வரும் நகரத்தையும் எழுத முயலுங்கள். எங்கும் துயரங்களுக்கு பஞ்சமில்லை.
நன்றி: பா. கண்மணி (சுஜாதா செல்வராஜின் முகநூல் பதிவிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/photo/?fbid=26848280738095624&set=a.839200196097034
வெளி ரங்கராஜன்
9 Feb 2026
சு.பொ. அகத்தியலிங்கம்
17 Feb 2026
சுஜாதா செல்வராஜின் சிறுகதைத் தொகுப்பு ‘கன்னிமார் சாமி’ பற்றிய பார்வை:
“இந்நூலில் இடம் பெற்றுள்ள 15 கதைகளையும் வாசித்த பின் ஒவ்வொரு ஆணும் குற்ற உணர்சியில் சில நொடிகளாவது மவுனித்தால், அதுவே இந்நூலின் பெருவெற்றி!”
நன்றி: சு.பொ. அகத்தியலிங்கம் (முகநூல் பதிவு)
முழுப்பதிவையும் வாசிக்க: https://www.facebook.com/share/1DHZ6ZzQVN/
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
பெண்ணுடலுக்கு ஒரு சாத்திரம்
-உடற்பயிற்சி, விளையாட்டு ஆகியவற்றில் ஒரு பெண்ணுக்கு இருக்கும்
மிகப்பெரிய தடையாகப் பல சமயம மேலும்














