Your cart is empty.
கந்தில் பாவை
1880-2015 க்கு இடைப்பட்ட நீண்டகாலப் பரப்பில் தன் கதையை விரித்துச் செல்கிறது ‘கந்தில்பாவை’. மனநிலை பாதிப்பு எனும் நோய் பரம்பரைபரம்பரையாகத் தொடரும் நுட்பத்தையும், யுத்தம் அந்த வடுக்களை … மேலும்
1880-2015 க்கு இடைப்பட்ட நீண்டகாலப் பரப்பில் தன் கதையை விரித்துச் செல்கிறது ‘கந்தில்பாவை’. மனநிலை பாதிப்பு எனும் நோய் பரம்பரைபரம்பரையாகத் தொடரும் நுட்பத்தையும், யுத்தம் அந்த வடுக்களை ரணமாக்கி அவர்களைச் மனச்சிதைவு நிலைக்குத் தள்ளும் அவலத்தையும் நான்கு தலைமுறைகளின் அனுபவங்களினூடாக நாவல் வெளிப்படுத்துகிறது. நான்கு கட்டங்களாய் நிகழும் தலைமுறைகளின் தனித் தனிக் கதைகளும், நாவலென்ற ஒற்றைச் சரட்டில் இணையும்படியாக இதன் புனைவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பின்னோட்ட விசையில் தன் கதையை விரித்துச் செல்லும் நாவல், அதையே தன் வடிவ உத்தியாகவும் சமைத்துக்கொள்கிறது. யாழ்ப்பாணத்தின் புராதன தலைநகராகக் கருதப்பெறும் கந்தரோடையையும் அதைச் சூழ்ந்த பிரதேசத்தையும் கதைக் களமாய்க்கொண்டு, வரலாறு - ஐதீகம் ஆகிய இரட்டைத் தடங்களில் தன் புனைவுப் பயணத்தைச் செய்திருக்கிறது நாவல்.
தேவகாந்தன்
தேவகாந்தன் (பி. 1947) இலங்கையின் வடமாகாணம் சாவகச்சேரியில் பிறந்தவர். 1968இல் ஈழநாடு தேசிய நாளிதழின் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றினார். பின் யுத்த நிலைமை காரணமாக இலங்கையிலிருந்து 1984இல் புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் வசித்த காலத்தில் இலக்கு சிற்றிதழை நடத்தினார். ‘கனவுச்சிறை’, ‘மகாநாவல்’ உட்பட பத்து நாவல்கள், இரண்டு குறுநாவல் தொகுப்புகள், நான்கு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘In the Name of Buddha’ ஆகிய சினிமாக்களில் பங்கேற்றதோடு, கனடாவில் ஒம்னி தொலைக்காட்சியில் சிறிதுகாலம் கடமையாற்றித் தன் அனுபவத்தின் எல்லைகளை விரித்துக்கொண்டார். தமிழ்நாடு அரசு நாவல் பரிசு, திருப்பூர் தமிழ்ச் சங்கம் லில்லி தேவசிகாமணி சிறுகதைப் பரிசுகள் உட்பட, கனடா இலக்கியத் தோட்டம் நாவல் பரிசு, தமிழர் தகவல் சாதனை விருதுகளையும் பெற்றிருப்பவர். தற்போது கனடாவில் வசித்து வருகிறார். மின்னஞ்சல்: baladevakanthan@gmail.com
ISBN : 9789352440221
SIZE : 13.9 X 1.9 X 21.5 cm
WEIGHT : 297.0 grams