Your cart is empty.
கருக்கு
செவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன். காரணம் நாம் சரித்திரத்தை வெகு வேகமாக மறப்பவர்கள். குறிப்பிட்டுச் … மேலும்
செவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன். காரணம் நாம் சரித்திரத்தை வெகு வேகமாக மறப்பவர்கள். குறிப்பிட்டுச் சொன்னால் தலித்துகளின் வாழ்க்கைச் சரித்திரங்களையும், பெண்கள் வாழ்க்கைப் போராட்டங்களையும் மறப்பது நமக்கு எளிதாக இருக்கிறது. அப்படி எளிதாக்கிக்கொள்வது நமக்கு வசதியாக இருக்கிறது. மனத்தைக் குத்துபவைகளை அவை இல்லாதவை போல பாவனை செய்துகொண்டு இருப்பவர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்க, அவர்களை முட்டி முட்டித் தொல்லை தர, அவர்களின் தடித்துப்போன தோல்களைக் கீறிவிட ‘கருக்கு’ தேவைப்படுகிறது. உருவகமாகவும் புத்தகமாகவும்.
பாமா
பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள வ. புதுப்பட்டி. அப்பா இரா. சூசைராஜ். இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். அம்மா செபஸ்தியம்மா கூலி வேலை செய்தார். ஆரம்பக் கல்வி புதுப்பட்டியில். தூத்துக்குடியில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மதுரையில் ஆசிரியர் பயிற்சிபெற்று பத்து ஆண்டுகள் பள்ளிகளில் பணியாற்றினார். பின்னர் துறவற மடத்தில் ஏழு ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக இருந்தார். 1992இல் துறவற மடத்தைவிட்டு வெளியேறி ‘கருக்கு’ நாவலை எழுதினார். கிராஸ்வேர்ட் விருதும் (2000) அமுதன் அடிகள் இலக்கியப் பரிசும் (2003) பெற்றுள்ளார். பாரிஸ் புத்தகத் திருவிழா (2002) சிங்கப்பூர் எழுத்தாளர் திருவிழா (2005), வாஷிங்டன் மேக்ஸிமம் இந்தியா விழா (2011) முதலிய பண்பாட்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.
ISBN : 9789382033929
SIZE : 13.9 X 0.5 X 21.4 cm
WEIGHT : 159.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
பெருந்தொற்று
-அல்பெர் கமுய் படைத்துள்ள இப்புதினம், அண்மையில் உலகை உலுக்கிய
கொரோனாப் பெருந்தொற்று நோயின மேலும்