Your cart is empty.
கருப்புப் புத்தகம்
கிழக்கின் கலாச்சார வளத்தையும் மேற்கின் நவீனத்தையும் தன்னில் ஒருங்கே ஊடுபாவியது ஒரான் பாமுக்கின் கதையுலகம். பாஸ்போரஸ் நதியின் இரு கரைகளாக இருக்கும் இந்த உலகங்களுக்கு இடையிலான முரண்களையும் … மேலும்
கிழக்கின் கலாச்சார வளத்தையும் மேற்கின் நவீனத்தையும் தன்னில் ஒருங்கே ஊடுபாவியது ஒரான் பாமுக்கின் கதையுலகம். பாஸ்போரஸ் நதியின் இரு கரைகளாக இருக்கும் இந்த உலகங்களுக்கு இடையிலான முரண்களையும் அடையாளச் சிக்கல்களையும் தொடர்ச்சியாக விசாரணை செய்வதால் அவரது எழுத்தின் சமகாலப் பொருத்தப்பாடு மிகுந்த முக்கியத்துவம் அடைகிறது. வெவ்வேறு கலைவடிவங்களையும் அறிவுப்புலங்களையும் தன்னூடே பயன்படுத்துவதால் அவரது நாவல்கள் இயல்பாகவே விரிவும் ஆழமும் கொண்டவையாக இருக்கின்றன. செறிவான கற்பனையினால் புனைவின் சாத்தியங்களை விஸ்தரிக்கும் பாமுக் தன் எழுத்தில் மையப்படுத்தும் மர்மம் வாழ்க்கையினுடையதே. அடையாளத் தேடல் என்னும் அவ்வாறான ஒரு மர்மத்தை புதிர்கள், ரகசியங்கள் மற்றும் குறியீடுகள் நிறைந்த பாதையின் வழியே துலக்கும் ஒரு பிரம்மாண்டமான பயணமே ‘கறுப்புப் புத்தகம்’ நாவலில் நிகழ்கிறது. - குணா கந்தசாமி
ஓரான் பாமுக்
ஓரான் பாமுக் (பி. 1952) துருக்கிய நகரமான இஸ்தான்புல்லில் வசதியான குடும்பத்தில் ஓரான் பாமுக் பிறந்தார். பள்ளிப் படிப்புக்குப் பின்னர் ஓவியக் கலை மீதான ஆர்வம் காரணமாக இஸ்தான்புல் தொழில் பல்கலைக்கழகத்தில் கட்டடக் கலை பயின்றார் பட்டம் பெற்றும் அதைத் தொழிலாக ஏற்றுக்கொள்ளவில்லை. எழுத்துத் துறையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் இஸ்தான்புல் பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்றார். இருபத்திரண்டாம் வயதில் நாவல் எழுதுவதில் முனைந்தார். முதல் நாவல் 'செவ்தெத் பேயும் பிள்ளைகளும்' . 1982இல் வெளியானது. தொடர்
ISBN : 9789355230058
PAGES : 624