Your cart is empty.
பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவில், கோடை மலையின் உள்ளடங்கியதொரு பகுதியில் தனித்திருக்கும் கிருத்துவ தேவாலயம் ஒன்றில் நடக்கும் இரகசியமான ஆராய்ச்சியையும் அதைப் பற்றி எழுதப்படும் குறிப்புகள் அடங்கிய பிரதி விந்தையான வகையில் மறைந்து போவதையும் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இக்கதை அறிவைச் சேகரித்துத் தொகுப்பதன் பின்னிருக்கும் மறைமுகமான அதிகாரம், அரசியல் ஆகியவற்றையும் கோடிட்டுக் காட்டுகிறது.
தனித்துவமான கற்பனைகளைத் திருட்டிற்குப் பலி கொடுத்த ஒருத்தி, பிறரது சிந்தனைகளைத் திருடும் மேற்கத்திய மருத்துவனைத் தடுக்க, தன் வரலாற்றை இழந்த ஒருவனோடு, தனது பால்ய கனவுகளைத் தவறவிட்ட கன்னியாஸ்திரியையும் கூட்டுசேர்த்துக்கொண்டு, பூரணமாகக் கட்டி முடிக்கப்படாத கட்டிடத்திற்குள், முழுவதுமாய் எழுதி முடிக்கப்படாத நூலைத் தேடி அலைகிறாள்.
வழக்கமான நேர்க்கோட்டு விவரிப்பு முறையினின்றும் விலகி உள்ளடுக்குகள் கொண்ட மலரொன்று அலர்வதைப் போல நிதானமாக விரியும் இச் சிறு நாவல் நிறைவானதொரு வாசிப்பு அனுபவத்தை நல்குகிறது.
ISBN : 9789355230157
SIZE : 14.1 X 0.9 X 21.7 cm
WEIGHT : 225.0 grams
நிஜந்தன் தோழன்
6 Jan 2026
தூயனின் ‘கதீட்ரல்’ நாவல்
வாசக அனுபவம்
…அரசதிகாரம், தொன்மம் இவற்றை நேரடியாகவும் நேர்கோட்டு தன்மையில்லாமலும் வாசிப்பு இன்பத்தோடு 'கதீட்ரல்' நாவல் சொல்லியிருக்கிறது…
…அவந்திகையின் முன்கதையும், ஆப்ரஹாமோடு அவளது உரையாடல்தான் நாவலை முக்கிய கட்டத்திற்கு எடுத்து செல்கிறது. அதை எமிலியை அறிய செய்வது பூனி என்ற பூனை. அவந்திகையின் சுகந்தத்தால் அவளிடமே கட்டுண்டு கிடக்கிறது. இப்படி ஒவ்வொருவரும் முகம் சுழிக்கும் தருணம் கூட எப்படியிருக்கும் என்று சொல்லக்கூடிய அளவில் நாவலின் விவரணைகள் உள்ளன…
…பூர்வகுடிகளின் நம்பிக்கை அதன் மீதான, மேலை தேய அறிவிற்கு உள்ள வேற்றுமையை காட்டும் இறுதி அத்தியாயம் தூயனின் படைப்புகளில் சிறந்தது என்பது மட்டுமல்லாமல் தமிழின் மிக முக்கியமான படைப்புகளில் சிறந்தது…
நன்றி: நிஜந்தன் தோழன் (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/100001272259577/posts/26083210284638024/?rdid=cnmyRmj1o9LO0ubB#














