Your cart is empty.
கற்றதால்
-தமிழ்நாட்டு உயர்கல்விச் சூழலைக் களமாகக் கொண்ட நாவல். வளாக நாவல் (Campus Novel) … மேலும்
-தமிழ்நாட்டு உயர்கல்விச் சூழலைக் களமாகக் கொண்ட நாவல். வளாக நாவல் (Campus Novel) என்ற இலக்கிய வகைமையின் புதிய வடிவத்தில் முன்னோடிப் படைப்பு என்று கருதத்தக்கது. புனைவு, அல்புனைவு, அனுபவப் புனைவு, அரசியல், வரலாறு, இலக்கிய ஆளுமைகள், பிரதிகள் தொடர்பான குறிப்புகள் போன்ற கதையாடல் இழைகள் பலவும் ஊடாடும் பிரதியாக இது பின்னப்பட்டுள்ளது. பகுதிகளைக் கொண்டு ஒரு களத்தின் முழுச்சித்திரத்தை உருவாக்கும் உத்தி இது.
சமகாலக் கல்விப் புலத்தின்மீது அடுக்கப்பட்டுள்ள பிரமைகளைத் தகர்க்கும் அதே வேளையில் அதன் மேலான பகுதிகளை இந்நாவல் உவப்புடன் முன்வைக்கிறது.
அங்கதம் இந்தப் பிரதியில் பிரதானமாகத் தொழிற்படுகிறது. அந்தத் தொனி விளைவிக்கும் கேலிக்கும் கிண்டலுக்கும் பின்னாலுள்ள வருத்தமும் கோபமும் கவனம் கொள்ளத்தக்கவை.
ISBN : 9788119034260
SIZE : 14.0 X 2.0 X 21.0 cm
WEIGHT : 0.25 grams
இந்து தமிழ் திசை
29 Oct 2024
ஆர். சிவகுமாரின் “கற்றதால்” நாவலுக்கான மதிப்புரை
“ஓர் எளிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவன் ஒருவனின் இளமைக் காலத்தையும் முதல் தலைமுறையாக அவன் கல்லூரிக் கல்வி பயின்று மேலெழுந்து வருவதில் அடைந்த பாடுகளையும் விவரிக்கும் அவருடைய முதல் புனைவான ‘தருநிழல்’ நாவலின் தொடர்ச்சியாகவும் இந்த இரண்டாவது நாவலை வாசிக்கலாம்…”
- க. மோகனரங்கன்
https://www.facebook.com/photo/?fbid=1023407176466451&set=pb.100063915338705.-2207520000
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ராணி வேலு நாச்சியார் - சிவகங்கையின் சாகச அரசி
-பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆற்காட்டின் பிரதான மாகாணங்களை
நவாப்கள் தங்கள் கட்ட மேலும்













