Your cart is empty.


கழிமுகம்
புற நெருக்கடிகளால் படைப்புச் செயல்பாட்டில் ஈடுபடாமலிருந்த சிறிய இடைவெளிக்குப் பிறகு பெருமாள்முருகன் எழுதிய இந்த நாவல் சமகால வாழ்வின் நிழலான பகுதிகள்மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது.
இன்றைய வாழ்க்கைமுறை அதன் அனைத்து வசதிகளுடன் பல்வேறு சிக்கல்களையும் கொண்டுவருகிறது. அந்தச் சிக்கல்களில் முக்கியமானது உறவுச் சிக்கல். இந்தப் பரிமாணத்தைத் தந்தை-மகன் உறவின் பின்னணியில் வைத்துப் பார்க்கிறார் பெருமாள்முருகன். தலைமுறை இடைவெளி தொன்றுதொட்டுத் தொடர்ந்து வருவதுதான் என்றாலும் இன்றைய காலகட்டத்தில் அது எடுத்திருக்கும் வடிவம் வரலாறு காணாதது. திகைக்கவைக்கும் இந்த மாற்றத்தை உணர்ச்சியின் அழுத்தம் இல்லாமல் மெல்லிய அங்கதச் சுவையுடன் சித்தரிக்கிறார் நாவலாசிரியர்.
புனைவு வடிவங்கள் சார்ந்த ஆகிவந்த வரையறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டுச் சுதந்திர உணர்வுடன் பெருமாள்முருகன் இந்த நாவலில் வெளிப்படுகிறார். நாவலின் மொழிநடை, கதையைக் கட்டமைக்கும் விதம், விவரங்களை அடுக்கிச் செல்லும் விதம் ஆகியவற்றில் இந்தச் சுதந்திரத்தின் அடையாளங்களைக் காணலாம்.
சமகாலம் குறித்த புனைவுகளில் முக்கிய இடம்பெறத் தக்க நாவல் ‘கழிமுகம்'.
ISBN : 9789388631006
SIZE : 14.0 X 1.3 X 21.5 cm
WEIGHT : 242.0 grams