Your cart is empty.
கோடைகாலக் குறிப்புகள்
யதார்த்த வாழ்வின் மீதான தேடல், விசாரணை சற்றும் மிகைப்படுத்தப்படாமல் ஆரவார மற்ற கவிதை அனுபவங்களாகத் தளமாற்றம் பெறுகின்றன. வார்த்தைகள் முறுக்கிக் கொண்டு அவஸ்தைப் படாமல் - படுத்தாமல் … மேலும்
யதார்த்த வாழ்வின் மீதான தேடல், விசாரணை சற்றும் மிகைப்படுத்தப்படாமல் ஆரவார மற்ற கவிதை அனுபவங்களாகத் தளமாற்றம் பெறுகின்றன. வார்த்தைகள் முறுக்கிக் கொண்டு அவஸ்தைப் படாமல் - படுத்தாமல் அனுபவ உணர்வுகளின் சாராம்சத்தால் கூர்மையடைந்து மன உணர்வுகளில் பாய்ந்து அதிர்வடையச் செய்கின்றன. இதற்கேற்ப செறிவான படிமங்களும், இறுக்கமான கவிதை அமைப்பும் உயிர்த் துடிப்புடன் வெகு இயல்பாக இணைந்து பன்முக அர்த்தத் தளத்தில் இயங்கிக் கவிதைக் கலையாகப் பரிமாணம் கொள்கிறது. இதன் காரணமாகவே இன்றைய இளங்கவிஞர்களில் சுகுமாரன் முதன்மையாக நம் கவனிப்புக்குள்ளாகிறார். Kalachuvadu has published a collection edition of Sukumaran’s first and path breaking collection, ‘Kodaikala Kurippugal.
சுகுமாரன்
கோவையில் பிறந்தவர். அச்சிதழ், தொலைக்காட்சி, நூல் வெளியீட்டுத் துறைகளில் பணியாற்றியவர். கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். இலக்கிய இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதிவருகிறார். திருவனந்தபுரத்தில் வசிக்கிறார்.
ISBN : 9789381969595
SIZE : 17.5 X 0.5 X 17.7 cm
WEIGHT : 94.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும்
சைதன்யரின் வருகையோடு சமூகச் சலனங்கள் உருவான பதினைந்தாம் நூற்றாண்டின் வங்காளத்தில் பழங்குடிச்சமூக மேலும்
காகித மலர்கள்
சூழலியல் சார்ந்த அக்கறைகள், தில்லி அரசியலின் குறுக்குவெட்டுப் பார்வை, பெருநகரத்து மனிதர்களின் உள் மேலும்