Your cart is empty.
கோலம் : ஒரு புதிய பார்வை
-பெரும்பான்மைத் தமிழரின் வாழ்வுடன் இணைந்தது கோலம். ஒவ்வொரு நாளும் … மேலும்
-பெரும்பான்மைத் தமிழரின் வாழ்வுடன் இணைந்தது கோலம். ஒவ்வொரு நாளும் வீட்டு வாசலில் கோலம்போடும் வழக்கம் தமிழர் மரபில் ஊறியது. கோலம் தொடர்பான மத நம்பிக்கைகளைத் தவிர்த்துவிட்டுக் கோலத்தின் பன்முகக் கூறுகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இந்த நூலை லீலா வெங்கட்ராமனும் முனைவர் வெ. கிருஷ்ண மூர்த்தியும் உருவாக்கியிருக்கிறார்கள். கோலத்தை விஞ்ஞான ரீதியில் அணுகி, தகவல்களைத் தருகிறார்கள்.
கோலத்தின் வரலாறு, வகைகள், அழகு, மீனாட்சி அம்மன் கோவிலில் போட்ட லட்சம் புள்ளிக் கோலம் வடிவமைக்கப்பட்ட விதம், இணையத்தில் கோலம், இதயக் கமலம், ஐஸ்வர்யக் கோலம், கோலப் புதிர்கள், விளையாட்டுக்கள், கோலத்திற் கான மென்பொருள்கள் என்று பல தலைப்புகளில் கோலம் பற்றிய செய்திகளை இதில் காணலாம். கணிதத் துறைக்கும் கோலத்திற்கும் உள்ள தொடர்பு, பயிற்சிகள் முதலானவையும் உள்ளன.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோலக் கலையை இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் உருவாகி யிருக்கும் நூல் இது.
ISBN : 9789361107665
SIZE : 14.0 X 1.0 X 21.0 cm
WEIGHT : 250.0 grams













