Your cart is empty.
கு. அழகிரிசாமி சிறுகதைகள்
கு. அழகிரிசாமி புதுமைப்பித்தன் பரம்பரை எழுத்தாளர். சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, பதிப்பு, நாடகம், கவிதை, நாவல் ஆகிய இலக்கிய வகைகளில் தனித்தன்மையுடன் செயல்பட்டவர். எளிய நடை, சித்தரிப்பின் … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | சிறுகதைகள் | சிறுகதைகள் முழுத்தொகுப்பு |
கு. அழகிரிசாமி புதுமைப்பித்தன் பரம்பரை எழுத்தாளர். சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, பதிப்பு, நாடகம், கவிதை, நாவல் ஆகிய இலக்கிய வகைகளில் தனித்தன்மையுடன் செயல்பட்டவர். எளிய நடை, சித்தரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடிவந்த கலை அழகிரிசாமியின் எழுத்து. தமிழில் சிறுகதைக்காக சாகித்திய அக்காதெமி பரிசுபெற்ற முதல் எழுத்தாளர். இத்தொகுப்பில் அவரது எல்லாக் கதைகளும் கால வரிசையில் இடம்பெறுகின்றன. பல கதைகள் முதன்முதலாக நூலாக்கம்பெறுகின்றன. நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கு. அழகிரிசாமியின் இடத்தை இத்தொகுப்பு நிலைநிறுத்தும்.
கு. அழகிரிசாமி
கு. அழகிரிசாமி (1923-1970) புதுமைப்பித்தன் பரம்பரை எழுத்தாளர். இடைசெவலில் பிறந்தவர். சென்னையிலும் மலேயாவிலும் பிரசண்டவிகடன், சக்தி, தமிழ்நேசன் முதலான பத்திரிகைகளில் பணியாற்றியவர். சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, பதிப்பு, நாடகம், கவிதை, நாவல் ஆகிய இலக்கிய வகைகளில் தனித்தன்மையுடன் செயல்பட்டவர். எளிய நடை, சித்திரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடிவந்த கலை அழகிரிசாமியின் எழுத்து. எழுத்துலக அங்கீகரிப்பின் அடையாளமாக சாகித்திய அக்காதெமி விருது இறப்புக்குப் பின் அவருக்கு வழங்கப்பட்டது. தமிழில் சிறுகதைக்காக இப்பரிசைப் பெற்ற முதல் எழுத்தாளர். இத்தொகுப்பில் அவரது எல்லாக் கதைகளும் காலவரிசையில் இடம்பெறுகின்றன. பல கதைகள் முதன்முதலாக நூலாக்கம் பெறுகின்றன. நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கு. அழகிரிசாமியின் இடத்தை இத்தொகுப்பு நிலைநிறுத்தும்.
ISBN : 9789380240404
SIZE : 16.0 X 6.5 X 23.7 cm
WEIGHT : 1726.0 grams