Your cart is empty.
குறத்தி முடுக்கு
‘குறத்தி முடுக்கு’ ஓர் இடமில்ல. ரத்தமும் நிணமும் சீழும் ஓயாமல் கசியும் … மேலும்
‘குறத்தி முடுக்கு’ ஓர் இடமில்ல. ரத்தமும் நிணமும் சீழும் ஓயாமல் கசியும் ஆறாத ரணம். தான் உயிர்தப்ப, பல்லி துறந்த வால். பிறகு அதே பல்லியின் தினவுக்கு வடிகாலன அவலம். மும்பையின் காமாட்டிபுரா, கொல்கொத்தாவின் சோனாகாச்சி போல, தமிழ்நாட்டுத் திருநெல்வேலியில் ஜி.நாகராஜன் உருவக்கிய விலைப்பெண்டிர் தெரு. ‘குறத்தி முடுக்’ கின் பிரவாகத்தில் அமிழ்ந்து மூச்சுத்திணறும் பெண்கள் ஒருபுறம்; சந்தர்ப்பவசத்தால் சிக்கிக்கொண்ட தொழிலுக்கு உடம்பையும் கொஞ்சமும் மங்கிவிடாதபடி தான் அடைகாக்கும் கனவுக்கு மனத்தையும் கொடுத்து நீர் ஒட்டாத இலைபோல வாழும் தங்கம் மறுபுறம்; இருதரப்பையும் ஒரு மாயக்கோடுபோல இணைக்கும் பத்திரிகையாளன் என மூன்று தரப்புகளின் சங்கமம் இந்தக் குறுநாவல். பொதுவாகவே ஜி.நாகராஜனின் படைப்புகளில் ஒருவிதக் கைப்புச்சுவை உண்டு. ‘குறத்தி முடுக்’கிலும் நிராசையின் குரல் ஓங்கித்தான் ஒலிக்கிறது. ஆனால் அதையும் மீறி, மனித மனத்தில் இயற்கையாக ஊற்றெடுக்கும் வாஞ்சையும் கம்பீரமும் இந்தக் குறுநாவலில் முன்நிற்கின்றன. -யுவன் சந்திரசேகர்
ஜி. நாகராஜன்
ஜி. நாகராஜன் (1929 - 1981) ஜி. நாகராஜன் மதுரையில் பிறந்தார். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர். பட்டதாரி. ‘குறத்தி முடுக்கு’ குறு நாவலும் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். இவ ருடைய தமிழ், ஆங்கில படைப்புகளின் முழுமையான தொகுப்பு ‘ஜி. நாகராஜன் ஆக்கங்கள்’ (காலச்சுவடு பதிப்பகம், 2007). மனைவி : நாகலட்சுமி மகள் : ஆனந்தி மகன் : கண்ணன்
ISBN : 9788187477730
SIZE : 12.1 X 0.5 X 18.0 cm
WEIGHT : 98.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்