Your cart is empty.
மாலை மலரும் நோய்
திருக்குறளின் காமத்துப்பாலுக்குச் செய்யப்பட்ட உற்சாகமும் சுவாரசியமும் கூடிய உரை என்பதைத் தாண்டி இந்நூலில், ஆண்ட்ராய்டு காலத்துக் காதலில் மறைந்திருக்கும் வள்ளுவயுகத்துக் காதலையும் கண்டுபிடிக்கிறார் இசை. பின், எந்தக்காலத்தில் … மேலும்
திருக்குறளின் காமத்துப்பாலுக்குச் செய்யப்பட்ட உற்சாகமும் சுவாரசியமும் கூடிய உரை என்பதைத் தாண்டி இந்நூலில், ஆண்ட்ராய்டு காலத்துக் காதலில் மறைந்திருக்கும் வள்ளுவயுகத்துக் காதலையும் கண்டுபிடிக்கிறார் இசை. பின், எந்தக்காலத்தில் எந்தக்காலமோ எனப் பரவசம் கொள்கிறார். அந்தப் பரவசமே மேதைமையாக, நகையுணர்ச்சியாக, உபாசனையாக, விளையாட்டாக, திகைப்பாக, குழந்தைமையாக நூலெங்கும் வெளிப்பட, கடைசிப் பக்கத்திற்குப் பின்பு, காதலின் அத்தனை ஆட்டங்களையும் அறிந்த ஒரு கவிஞனாக, தோழனாக வள்ளுவன் எழுந்து வருவதைப் பார்க்கிறோம். அறத்தையும் பொருளையும் சற்றே நெகிழ்த்திவிட்டு அவனை அப்போது அறியவும் நெருங்கவும் முயல்வது நமக்கு அவசியமானதும்கூட. ஆசையின் எளிய ஜீவன்கள்தானே நாமெல்லாம் இல்லையா?
ISBN : 9789390802951
SIZE : 13.9 X 0.7 X 21.4 cm
WEIGHT : 160.0 grams