Your cart is empty.
மகாபாரதம் (இ-புத்தகம்)
-பேரரசுகள் உருவாகியிருக்கின்றன, வீழ்ந்திருக்கின்றன; பல்வேறு மதப் பிரிவுகள், தத்துவப் பார்வைகள் ஆகியவை எழுச்சி பெற்றுக் கால வெள்ளத்தில் மங்கியிருக்கின்றன. ஆனால் மகாபாரதம் இந்திய மக்களின் மனங்களில் பெற்றுள்ள … மேலும்
-பேரரசுகள் உருவாகியிருக்கின்றன, வீழ்ந்திருக்கின்றன; பல்வேறு மதப் பிரிவுகள், தத்துவப் பார்வைகள் ஆகியவை எழுச்சி பெற்றுக் கால வெள்ளத்தில் மங்கியிருக்கின்றன. ஆனால் மகாபாரதம் இந்திய மக்களின் மனங்களில் பெற்றுள்ள இடம் அதன் ஒளியும் வலிமையும் குன்றாமல் நீடிக்கிறது.
மகாபாரதம் குறித்த அலசல்களின் எண்ணிக்கையே மலைப்பூட்டுகிறது. தலைமுறை தலைமுறையாக இந்திய மக்களைத் தன் வசீகர வலைக்குள் மகாபாரதம் வைத்திருப்பதற்கு என்ன காரணம்? காலத்தால் அழியாத இந்த மாய சக்திக்குக் காரணம் என்ன? புராணத்தன்மை கொண்ட பாத்திரங்கள்தான் இதன் வசீகரத்திற்குக் காரணமா? இதிலுள்ள தத்துவப் பார்வைகளும் விவாதங்களும் வாசகர்களை ஈர்க்கின்றனவா? எண்ணற்ற சிக்கல்களும் வியப்பூட்டும் திருப்பங்களும் நுட்பமான ஊடுபாவுகளும் கொண்ட கதைதான் மகாபாரதத்தின் வசியத்திற்குக் காரணமா?
இக்கேள்விகளுக்கு விடைகாணும் தேடலை மேற்கொள்ளும் இந்த நூல், இந்தியாவின் தேசியக் காவியங்களில் ஒன்றாக விளங்குவது ஏன் என்னும் கேள்வியையும் ஆராய்கிறது. மராத்தி, கன்னடம், அஸ்ஸாமி, உருது, குஜராத்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்த நூல் தற்போது தமிழுக்கு வருகிறது. காவிய உணர்வும் அறிவார்த்தமான அலசலும் கொண்ட இந்த நூலை அதன் தன்மை மாறாமல் தமிழாக்கியிருக்கிறார் அரவிந்தன்.
ISBN : 9789355233769
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மீதி வெள்ளித்திரையில் ( இ-புத்தகம்)
-திரைப்படம் குறித்த தியடோர் பாஸ்கரனின் பார்வை விரிவும் நுட்பமும் கொண்டது. சமகால வாழ்வோடு திரைப்பட மேலும்
கேளிக்கை மனிதர்கள் (இ-புத்தகம்)
-படைப்பிலக்கியம் சார்ந்தே மிகுதியும் எழுதிவரும் அரவிந்தன் தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும் நிகழ்த மேலும்













