Your cart is empty.
மனநோய்களும் மனக்கோளாறுகளும்
மக்கள் மத்தியில் மனநோய்கள், மனக்கோளாறுகள் குறித்துப் பல குழப்பங்களும் தவறான புரிதல்களும் உள்ளன. மனநலம் பற்றிய தமிழ் நூல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. மக்களிடையே பரவலாகக் காணப்படும் … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | உடல்நலம் / மருத்துவம் | உணவு மருத்துவம் |
மக்கள் மத்தியில் மனநோய்கள், மனக்கோளாறுகள் குறித்துப் பல குழப்பங்களும் தவறான புரிதல்களும் உள்ளன. மனநலம் பற்றிய தமிழ் நூல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. மக்களிடையே பரவலாகக் காணப்படும் மனக்கோளாறுகள் பற்றி - மனச்சோர்வு முதல் மதுப் பழக்கம்வரை, அல்சைமர் மறதிநோய் முதல் உளவியல் ரீதியான பாலியல் கோளாறுகள்வரை - இந்நூல் விளக்குகிறது. வாசகர், மருத்துவர்கள், ஆரம்ப சுகாதாரப் பணியாளர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் எளிய தமிழில் எழுதப்பட்ட இந்நூல் மனக் கோளாறுகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் வினாப் பட்டியல்களையும் தன்னுதவிக் குறிப்புகளையும் கொண்டிருப்பது தனிச்சிறப்பு. ஒவ்வொரு இயலிலும் ஆராய்ச்சிச் சான்றுகள் மேற்கோள் காட்டப் பட்டுள்ளன. இந்நூல் வழங்கும் தகவல்கள் வாசகர் மனதில் மனநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
டாக்டர் எம்.எஸ். தம்பிராஜா
டாக்டர் எம்.எஸ். தம்பிராஜா (பி. 1942) கடந்த 30 ஆண்டுகளாக இங்கிலாந்தின் பர்மிங்ஹம் நகரில் மனநல மருத்துவராகப் பணிபுரிந்துவரும் இவரின் சிறப்புத் துறை சிறார்கள் மற்றும் வளர்இளம் பருவத்தினர் மனநலம் (Child and Adolescent Psychiatry). பர்மிங்ஹம் பல்கலைக்கழகத்தில் மனநலத்துறை விரிவுரையாளராகவும் மனநலத்துறை முதுகலைப் பட்டப்படிப்பில் தேர்வாளராகவும் (Examiner in Postgradute Psychiatry) மனநலப் பயிற்றுவிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் எழுதிய நூலான Psychological Basis of Psychiatry 2005ஆம் ஆண்டுக்கான British Medical Association Book Award பெற்று, தற்போது மனநலத்துறை முதுகலைப் பட்டப்படிப்பில் ஒரு பாடப் புத்தகமாக உள்ளது. பல தொழில்சார் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் மீளாய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
ISBN : 9789384641009
SIZE : 13.8 X 1.6 X 21.4 cm
WEIGHT : 383.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
நலம் தரும் யோகம் (ஆசனம் -பிராணாயாமம் -தாரணை - தியானம்)
உடல் நலம், மன நலம் ஆகிய இரண்டையும் சிறப்பாகப் பேணுவதற்கு யோகாசனப் பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. மேலும்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்