Your cart is empty.
-“எம்.டி. வாசுதேவன் நாயரின் இந்த நாவல் காத்திருப்புகளின் கதை. காலமும் இடமும் மனங்களும் இந்தக் கதையில் காத்திருக்கின்றன. கோடை நாட்கள் குளிர் பருவம் வரக் காத்திருக்கின்றன. தன்னைத் தேடிவரும் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு மலைப்பிரதேசம் காத்திருக்கிறது. ஒருபோதும் பார்த்திராத பளிங்குக்கண் தகப்பனுக்காக ஒரு சிறுவன் காத்திருக்கிறான். ஒருகாலத்தில் பார்த்துக் களித்த நீல நரம்புகள் துடிக்கும் முகத்துக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள். ஒருமுறைகூடப் பார்த்துவிட முடியாத மரணத்துக்காக ஒரு மனிதன் காத்திருக்கிறான். காத்திருப்பின் தனிமையும் எதிர்பார்ப்பின் துயரமும் மூடுபனியாக அந்த மனிதர்களை, இடத்தை, காலத்தை மூடுகிறது. அந்த உறைபனிக்குள் உணர்வுகள் உருகிச் சொற்களாக உருமாறி மௌனத்தின் இசையுடன் பெருகுகின்றன. கதையின் ஓட்டம் வாசிப்பவர்களின் மனவெளியில் மஞ்சுப் படலமாகப் படர்கிறது.”
ISBN : 9789390224685
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
காந்த்ருக் (இ-புத்தகம்)
வாழ்வதற்கான காரணங்கள் நிறையவே இருக்கின்றன; ஆனால் வாழ்ந்ததற்கான பொருள் இருக்கிறதா என்று தேடுவதுதான மேலும்
தாகத்தின் சுழல் காற்று (இ-புத்தகம்)
மிஸ்ராவின் கவிதைகள் வாழ்வின் துயரங்களிலிருந்து துளிர்த்தெழுந்து வாழ்தலின் இனிமையைக் கொண்டாட முயல் மேலும்













