Your cart is empty.
மெட்ராஸ் வணிகரின் சீன மனைவி : சீன மொழிக் கதைகள்
-சூ டிஷான், சீனாவில் பரவலாக அறியப் படும் எழுத்தாளர். … மேலும்
-சூ டிஷான், சீனாவில் பரவலாக அறியப் படும் எழுத்தாளர். 1920களில் அவர் எழுதிய இந்த மூன்று கதைகள், சீனாவின் புதிய கலாச்சார இயக்கத்தில் அறிவியலும் வெளிப்படையான கருத்துக்களும் பரவியிருந்த காலத்தில் அவருடைய தனிப்பட்ட பார்வையைப் பிரதிபலிக்கின்றன. இந்தியத் தத்துவத்தால் ஆழ்ந்த பாதிப்புக்குள்ளான அவர், வாழ்வை மீட்டெடுப்பதில் மதத்திற்கு உள்ள சக்தியை முக்கியமாகக் குறிப்பிடுகிறார்.
‘மெட்ராஸ் வணிகரின் சீன மனைவி’ (ஷாங்ரென் ஃபு) கதையில், மலேசியா சென்ற சீனப் பெண், மெட்ராஸில் ஒரு முஸ்லிம் வணிகரிடம் விற்கப்பட்டு, இந்திய மொழிகளையும் மதங்களையும் கற்று ஆன்மிக விடுதலை அடைகிறாள். பிற கதைகள் மனிதர்களுக்கும் சமூகத்துக்கும் விதிக்கும் இடையிலான உறவுகளைப் பற்றியவை. தனிமனிதர்கள் விதியுடன் போராடி வாழ்வதை இக்கதைகள் ஆராய்கின்றன.
சீன - தமிழக வரலாற்றுத் தொடர்புகள் பெரும்பாலும் இராஜதந்திரம், வர்த்தகம் சார்ந்தே அமைந்திருந்தன. இந்தக் கதைகள் அந்தக் காலகட்டத்தில் சீனா, இந்தியா, தெற்காசியாவுக்கு இடையிலான தொடர்புகளைப் புரிந்துகொள்ள உதவும்.
ஈஸ்வரி (சோ சின்) இந்தக் கதைகளைச் சீனத்திலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
ISBN : 9789361102219
SIZE : 14.0 X 0.5 X 21.0 cm
WEIGHT : 0.9 grams













