Your cart is empty.


மீதி வெள்ளித்திரையில் . . .
திரைப்படம் குறித்த தியடோர் பாஸ்கரனின் பார்வை விரிவும் நுட்பமும் கொண்டது. சமகால வாழ்வோடு திரைப்படம் கொண்டுள்ள இணைவுகள் அல்லது இடைவெளிகள் குறித்து அவர் சமூகவியல் நோக்கில் சிந்திப்பவர் … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: குளச்சல் மு. யூசுப் |
வகைமைகள்: சினிமா கட்டுரைகள் |
திரைப்படம் குறித்த தியடோர் பாஸ்கரனின் பார்வை விரிவும் நுட்பமும் கொண்டது. சமகால வாழ்வோடு திரைப்படம் கொண்டுள்ள இணைவுகள் அல்லது இடைவெளிகள் குறித்து அவர் சமூகவியல் நோக்கில் சிந்திப்பவர் என்பதால் மட்டும் உருவானதல்ல அது. மிகமிகப் புதிதான ஒரு கலைவடிவம் எப்படி பைய்ட் பைப்பரைப் போல எல்லோரையும் குழந்தைகளாக்கித் தன் பின்னால் இழுத்துச் செல்ல முடிந்தது என்பதை அவர் ஒரு வரலாற்றாய்வாளருக்குரிய முறையில் விளக்குகிறார். ஒரு நூற்றாண்டுக்கும் சற்று அதிகமான கால இடைவெளியில் அந்தக் கலை நம்மீது நிகழ்த்தியுள்ள தாக்கங்களைத் தொகுக்கும் பாஸ்கரனின் கட்டுரைகள் நமக்கு நன்கு பரிச்சயமான ஒரு கலையின் நாம் கவனிக்கத் தவறிய பகுதிகளை அறிமுகப்படுத்துகின்றன. பன்முக அர்த்தங்களை உள்ளடக்கிய அவரது மொழிநடை இக்கட்டுரைகளுக்குப் புனைவின் சாயல்களை அளிப்பதால் அவை நம் வாசிப்பனுபவத்தை மேலான தளத்துக்கு உயர்த்துகின்றன.
ISBN : 9788189359713
SIZE : 13.9 X 0.8 X 21.4 cm
WEIGHT : 170.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ஒருத்தி
-அம்ஷன் குமார் நம்முடைய சூழலின் பிரத்யேக வாழ்க்கை நிலை மற்றும்
நிலவெளி குறித்த உணர்வுடன் மேலும்
சினிமா கொட்டகை
இசை, நடனம், நாடகம் போன்ற பாரம்பரிய நிகழ்கலைகள் போலல்லாமல், சினிமா முற்றிலும் தொழில்நுட்பத்தை சார் மேலும்