Your cart is empty.
முதலியார் ஓலைகள்
அச்சில் வராத ஆவணங்களைப் பதிவுசெய்வது என்னும் செயல்பாடு தமிழில் அருகிவிட்டது. மிகமிகக் குறைந்த பதிவுகளில் இந்த நூலும் ஒன்று. கி.பி. 13 முதல் 17ஆம் நூற்றாண்டுவரை உள்ள … மேலும்
அச்சில் வராத ஆவணங்களைப் பதிவுசெய்வது என்னும் செயல்பாடு தமிழில் அருகிவிட்டது. மிகமிகக் குறைந்த பதிவுகளில் இந்த நூலும் ஒன்று. கி.பி. 13 முதல் 17ஆம் நூற்றாண்டுவரை உள்ள காலகட்டங்களில் நாஞ்சில் நாட்டின் நீராதாரம், வேளாண் தொழில், அதன் சிக்கல், நாட்டு மன்னர் வேளாண் தொழிலில் காட்டிய ஈடுபாடு, அடிமைச் சமூகம், சாதிகளுக்குள் உறவு எனப் பல தகவல்கள் இத்தொகுப்பில் உள்ளன. சமூக வரலாறு எழுதுபவர்களுக்கும் மொழி வல்லுநர்களுக்கும் சரியான ஆதாரம், பின்னிணைப்பில் கொடுக்கப்பட்ட குறியீடுகளில் பல கல்வெட்டுகளில் காணப்படாதவை. * வரலாற்றுச் செல்வங்களாகக் கருதத்தகும் இந்த ஆவணங்கள் யாவும் முறையாகத் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியவை. அ.கா. பெருமாள் மிக ஆர்வத்துடனும் முயற்சியுடனும் தொகுத்துப் பதிப்பித்துள்ள இந்த ஆவணத் தொகுதி தமிழ்நாட்டில் பரவலாக உள்ள பிற ஓலை ஆவணங்களைத் திரட்டவும் பயன்படுத்தவும் தூண்டுகோலாக அமையும் என்று கருதுகிறேன். அவருக்குத் தமிழ்நாடு, கேரள வரலாற்று ஆர்வலர் அனைவரும் மிகவும் கடமைப்பட்டவர்கள். (அறிமுகத்தில் Y. சுப்பராயலு)
ISBN : 9789352440702
SIZE : 13.8 X 0.9 X 21.2 cm
WEIGHT : 203.0 grams
Unpublished works getting documented has become a rare phenomenon in the Tamil context, and this book is one such treasure. Water resources, agriculture and related issues, the interest of rulers in agriculture, oppressed communities, caste relations and the many faces of Nanjil land between AD 13 - 17 are found in this book. The documentation is meticulously executed, with reference to records and culverts and hence is as useful to a researcher as it is enthralling to an interested reader.














