Your cart is empty.
நவசெவ்வியல் பொருளியல்
அறிவொளிக் காலத்தில் தோன்றிய செவ்வியல் அரசியல் பொருளாதாரக் கொள்கை ஆடம் ஸ்மித் கைகளில் பொருளியல் என்ற தனி இயலாக உருப்பெற்றது. அவருடைய வழிவந்த கார்ல் மார்க்ஸ் பொருள் … மேலும்
அறிவொளிக் காலத்தில் தோன்றிய செவ்வியல் அரசியல் பொருளாதாரக் கொள்கை ஆடம் ஸ்மித் கைகளில் பொருளியல் என்ற தனி இயலாக உருப்பெற்றது. அவருடைய வழிவந்த கார்ல் மார்க்ஸ் பொருள் மதிப்பை உருவாக்குவது தொழிலாளரின் உழைப்பே என்றார். நவசெவ்வியல் பொருளாதாரக் கருத்துகளை முன்வைத்த அறிஞர்களோ நுகர்வோரின் விருப்பத் தேர்வுகளே பொருள் மதிப்பின் அடிப்படை என்று வாதிடுகின்றனர். ‘ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை’ என்ற நூலில் செவ்வியல் அரசியல் பொருளாதாரத்தை விரிவாக அறிமுகப்படுத்திய பேராசிரியர் எஸ். நீலகண்டன் இந்நூலில் நவசெவ்வியல் பொருளியலை அதே ஆற்றொழுக்கான நடையில் தெளிவாக அறிமுகப்படுத்தியுள்ளார். உயர்கல்வி மாணவர்கள் மட்டுமல்லாமல் பொது வாசகர்களும் எளிதில் புரிந்துகொள்ளும்வகையில் அவர் எடுத்துக்காட்டும் உதாரணங்கள் நம் அன்றாட வாழ்க்கையிலிருந்து பயில்வதற்கும் பயிற்றுவிப்பதற்கும் இந்நூல் அரியதொரு கைவிளக்காகும்.
ISBN : 9789391093815
SIZE : 13.8 X 2.7 X 21.4 cm
WEIGHT : 570.0 grams