Your cart is empty.
ஓதி எறியப்படாத முட்டைகள்
இஸ்லாமிய சமூகத்தின் இருவேறு உலகங்களின் இயல்புகளைச் சொல்லுகிறது மீரான் மைதீனின் நாவல். பொருளாசையும் தரித்திரமும் கொண்ட இருவேறு மனித இயற்கைகளின் மோதலில் முன் நகர்கிறது இதன் கதையோட்டம். … மேலும்
இஸ்லாமிய சமூகத்தின் இருவேறு உலகங்களின் இயல்புகளைச் சொல்லுகிறது மீரான் மைதீனின் நாவல். பொருளாசையும் தரித்திரமும் கொண்ட இருவேறு மனித இயற்கைகளின் மோதலில் முன் நகர்கிறது இதன் கதையோட்டம். காணும் செல்வத்தையெல்லாம் தன்னுடைய தாக்கிக்கொள்ளும் ஹமீதுசாகிபு. வறியவனான குச்சித் தம்பி இருவருக்கும் இடையில் நடக்கும் சதுரங்க விளையாட்டின் பின்புலத்தில் பல்வேறு மனிதர்கள் உருட்டப்படுவதை எதார்த்தமும் மீபுனைவுமாக விரித்துச் சொல்லுகிறார் மீரான் மைதீன்.
மீரான் மைதீன்
மீரான் மைதீன் (பி. 1968) குமரி மாவட்டம், பெருவிளை இவரது சொந்த ஊர். 1998இல் எழுதத் தொடங்கினார். இவரது சிறுகதைத் தொகுதிகள் : ‘கவர்னர் பெத்தா’, ‘ரோசம்மா பீவி’, ‘சித்திரம் காட்டி நகர்கிறது’. நாவல் ‘ஓதி எறியப்படாத முட்டைகள்’. குறுநாவல் ‘மஜ்னூன்’. இஸ்லாமிய சமூகத்தின் மைய ஓட்டத்திற்குள் நம் பார்வைப் புலன்களுக்கு அறிமுகப்படாத முஸ்லிம்களின் வாழ்க்கைத் தளத்தில் இவரின் கதை உலகம் இயங்குகிறது.
ISBN : 9789380240619
SIZE : 13.9 X 1.1 X 21.5 cm
WEIGHT : 290.0 grams