Your cart is empty.
ஒற்றைக் குடும்பந் தனிலே: வீடுதோறும் கலையின் விளக்கம்
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராளியான சுப உதயகுமாரன் குடும்பம் சமூகம் குறித்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமூகத்தின் அடிப்படையாகக் குடும்பம் இருப்பதால் குடும்ப உறவுகளைச் … மேலும்
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராளியான சுப உதயகுமாரன் குடும்பம் சமூகம் குறித்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமூகத்தின் அடிப்படையாகக் குடும்பம் இருப்பதால் குடும்ப உறவுகளைச் சீர்படுத்தினால் சமூக உறவு சீர்படும் என்னும் நோக்கத்தில் இந்தக் கட்டுரைகள் அமைந்துள்ளன. குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவு, ஆண் - பெண் உறவு, காதல், காமம் போன்ற பல விஷயங்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதைத் தீர்க்கமாக யோசித்து அவற்றைக் கட்டுரைகளாக்கியுள்ளார் சுப. உதயகுமாரன். அவருடைய அனுபவம், சமூகப் புரிதல் ஆகியவை காரணமாக மனித உறவு குறித்த அடிப்படையான புரிதல்களை எல்லோரும் உணர்ந்துகொள்ளும் வகையில் மிகவும் எளிமையாக எழுதிச் செல்கிறார். கட்டுரைகளில் எனக்கு எல்லாம் தெரியும் என்ற ஆசிரியரின் தொனியைவிட ஆலோசனை கூறும் அன்பான அண்ணனின் தொனியே மேலோங்கியுள்ளது. இந்நூலை வாசிப்பவர்களுக்கு உறவுகள் பற்றிய புதிய தரிசனம் கிடைப்பதுடன் அவர்களின் அன்றாட வாழ்வை எளிதாகக் கையாளவும் வழிகிடைக்கிறது.
ISBN : 9789386820426
SIZE : 13.9 X 0.5 X 21.3 cm
WEIGHT : 114.0 grams