Your cart is empty.
பனி
ஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவமான நாவல் ‘பனி’. சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரது பிற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. பாமுக்கின் படைப்புகளில் வெளிப்படையாக அரசியல் … மேலும்
ஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவமான நாவல் ‘பனி’. சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரது பிற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. பாமுக்கின் படைப்புகளில் வெளிப்படையாக அரசியல் பேசும் நாவல் ‘பனி’. மதச் சார்புக்கும் சார்பின்மைக்கும் இடையிலான மோதலைத் துப்பறியும் கதையின் வேகத்துடனும் திருப்பங்களுடனும் சொல்கிறது இந்த நாவல். தனது படைப்புகளின் நிரந்தரக் களமான இஸ்தான்புல் நகரத்தைவிட்டு துருக்கியின் எல்லைப்புற நகரமான கார்ஸை புனைகளமாக்கியிருக்கிறார் பாமுக். ஒரு பனிக் காலத்தில் அந்த நகரத்துக்கு வந்து சேரும் பத்திரிகையாளன் ‘கா’வின் அனுபவங்களே இதன் கதை. இரட்டை ஆன்மா கொண்ட துருக்கியின் நிகழ்கால வரலாற்றையும் மானுட நிலையையும் நுட்பமாக முன்வைக்கும் படைப்பு.
ஓரான் பாமுக்
ஓரான் பாமுக் (பி. 1952) துருக்கிய நகரமான இஸ்தான்புல்லில் வசதியான குடும்பத்தில் ஓரான் பாமுக் பிறந்தார். பள்ளிப் படிப்புக்குப் பின்னர் ஓவியக் கலை மீதான ஆர்வம் காரணமாக இஸ்தான்புல் தொழில் பல்கலைக்கழகத்தில் கட்டடக் கலை பயின்றார் பட்டம் பெற்றும் அதைத் தொழிலாக ஏற்றுக்கொள்ளவில்லை. எழுத்துத் துறையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் இஸ்தான்புல் பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்றார். இருபத்திரண்டாம் வயதில் நாவல் எழுதுவதில் முனைந்தார். முதல் நாவல் 'செவ்தெத் பேயும் பிள்ளைகளும்' . 1982இல் வெளியானது. தொடர்
ISBN : 9789355230461
PAGES : 576