Your cart is empty.
பறவைகளும் வேடந்தாங்கலும்
கழ்பெற்ற கானுயிர் வல்லுநரான மா. கிருஷ்ணன் கலைக்களஞ்சியத்தில் பறவைகள் பற்றி எழுதியுள்ள 59 கட்டுரைகளும் 'வேடந்தாங்கல்' குறித்த சிறுநூலும் கொண்ட தொகுப்பு இது. சுருங்கச் சொல்லல், சுயபார்வை, … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | கட்டுரைகள் | இயற்கையியல் கட்டுரைகள் |
கழ்பெற்ற கானுயிர் வல்லுநரான மா. கிருஷ்ணன் கலைக்களஞ்சியத்தில் பறவைகள் பற்றி எழுதியுள்ள 59 கட்டுரைகளும் 'வேடந்தாங்கல்' குறித்த சிறுநூலும் கொண்ட தொகுப்பு இது. சுருங்கச் சொல்லல், சுயபார்வை, காட்சிப்படுத்தி மயக்க மூட்டும் நடை ஆகியவற்றுடன் அனுபவ சாரமாகத் தகவல்களை மாற்றிவிடும் அவரது எழுதுமுறை இக்கட்டுரைகளில் முழுமையாகத் துலங்குகிறது. அவரது எழுத்துக்கள் தமிழகம் சார்ந்தவை. நமது செல்வங்கள் பற்றியவை. தமிழ் அறிவுப்புலத்திற்குப் பங்களிப்பவை. கானுயிர்களே உலகைக் காக்கும் என்னும் உணர்வு உறுதிப்படும் இந்நாளில் அவற்றைப் பற்றிய அடிப்படை அறிவு அனைவருக்கும் தேவை. பறவைகளோடு இயைந்து வாழும் மகிழ்ச்சி பெருகும் வாழ்வை அவாவும் உள்ளங்களுக்கு மா. கிருஷ்ணனின் எழுத்துக்கள் நெருக்கமானவை.
ISBN : 9789380240213
SIZE : 13.9 X 0.8 X 21.4 cm
WEIGHT : 184.0 grams
An informative book on birds by the well-known Ornithologist M. Krishnan, with vibrant illustrations drawn by him.














