Your cart is empty.
பயணக் கதை
சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் மிகத் தேர்ந்த கதை சொல்லி யுவன் சந்திரசேகர். அதிதீவிரமான படைப்பும் சுவாரசியமாக எழுதப்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு அவரது புனைகதைகள். யுவன் சந்திரசேகரின் … மேலும்
சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் மிகத் தேர்ந்த கதை சொல்லி யுவன் சந்திரசேகர். அதிதீவிரமான படைப்பும் சுவாரசியமாக எழுதப்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு அவரது புனைகதைகள். யுவன் சந்திரசேகரின் ஆறாவது நாவலான ‘பயணக் கதை’ அவருடைய நாவல்களிலேயே உச்சபட்ச வாசிப்பு சுகத்தை உள்ளடக்கியிருக்கிறது. மூன்று நண்பர்கள் மேற்கொள்ளும் பயத்தின் கதையாகத் தொடங்கும் நாவல் மூவரும் சொல்லும் தனித்தனிக் கதைகளின் பயணங்களாக வாசக மனதில் விரிகிறது. மூன்று பயணக் கதைகளும் சந்திக்கும் புள்ளியில் அவை ஒரே கதையாகவும் குவிகின்றன. கிருஷ்ணன் சொல்லும் கதையும் இஸ்மாயில் சொல்லும் கதையும் சுகவனம் சொல்லும் கதையும் மூன்றாக இருந்தாலும் ஒன்றுக்கொன்று பின்னப்பட்டவை. ஒருவர் சொல்லும் கதையிலிருந்து கிளை பிரியும் இன்னொரு கதை, அதிலிருந்து விலகிச் செல்லும் மற்றொரு கதை, வேறொரு கதையிலிருந்து இன்னொரு கதைக்குள் வந்து சேரும் பிறிதொரு கதை என்று விரியும் நாவல் காலத்தைப் பகுக்கிறது. களங்களைப் புதிது புதிதாக உருவாக்குகிறது.
யுவன் சந்திரசேகர்
யுவன் சந்திரசேகர் (பி. 1961) பிறந்தது மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கருகிலுள்ள கரட்டுப்பட்டி என்ற சிறு கிராமத்தில். வசிப்பது சென்னையில். பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார். மின்னஞ்சல் : writeryuvan@gmail.com
ISBN : 9789380240855
SIZE : 13.9 X 1.7 X 21.5 cm
WEIGHT : 426.0 grams
This novel is about the journey undertaken by three friends and the different stories they tell during the journey.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ராணி வேலு நாச்சியார் - சிவகங்கையின் சாகச அரசி
-பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆற்காட்டின் பிரதான மாகாணங்களை
நவாப்கள் தங்கள் கட்ட மேலும்














