Your cart is empty.
பொம்பளைங்க பஞ்சாயத்து - பாலினச் சமத்துவத்திலிருந்து பாலின நீதியை நோக்கி
-கடைசியில் எல்லாம் பெண்களின் கேள்விகளில் வந்துநிற்கின்றன. ஏன், எதற்கு … மேலும்
-கடைசியில் எல்லாம் பெண்களின் கேள்விகளில் வந்துநிற்கின்றன. ஏன், எதற்கு என்று அவர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
பல நூற்றாண்டுகளாக எழாத கேள்விகள் எழுகின்றன; ஒலிக்காத எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கின்றன. சாதி, வர்க்கம், மதம், சமூக அந்தஸ்து ஆகிய எல்லை களைத் தாண்டி எல்லா மட்டங்களி லிருந்தும் பெண்களின் உரிமைக் குரல் ஒலிக்கிறது. இவற்றுக்குப் பதில் சொல்ல முடியாத ஆணாதிக்கச் சமூகம், “அட போம்மா. . . எப்போ பாத்தாலும் பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு” என்று சொல்லி அலட்சியப்படுத்தப் பார்க்கிறது.
ஆம், பெண்கள் பஞ்சாயத்துக் கூட்டுகிறார்கள். ஆணாதிக்கச் சமூகம் பாராமுகமாக இருந்தாலும் விடாமல் மல்லுக்கு நிற்கிறார்கள்.
இந்தப் ‘பஞ்சாயத்து’ காட்சிகளுக்கு மொழி வடிவம் தருகிறார் ஷாலின் மரிய லாரன்ஸ். பெண்களின் குரலை, நீதிக்கான வேட்கையை, வெறும் அறிவுத் தளத்தில் பிரதிபலிக்காமல் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலைப் பெண்களின் நிலையிலிருந்து பிரதிபலிப்பது இவரது தனித்துவம். ‘சண்டைக்காரிகள்’ தொகுப்பில் வெளிப்பட்ட இந்தப் போர்க்குரல் இந்தத் தொகுப்பில் மேலும் விரிவான தளங்களிலிருந்து பெண்களின் அன்றாடப் பிரச்சினைகளை அலசித் தீர்வுகாண்பதற்கான சமரைத் தொடுக்கிறது.
ISBN : 9789361105777
SIZE : 14.0 X 1.0 X 21.0 cm
WEIGHT : 220.0 grams













