Your cart is empty.
தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறைகளின் வாழ்க்கை இந்த நாவலின் பக்கங்களில் விரிகிறது. அகண்ட காலப் பரப்பிற்கேற்ற விரிவும் நுணுக்கமான கதையடுக்குகளும் கொண்ட நாவல் இது. ஏதோ ஒரு சாபம் தங்களைத் தலைமுறை தலைமுறையாகத் துரத்துகிறதோ என்னும் ஐயமே இந்தக் கதையின் கண்ணுக்குத் தெரியாத பின்புலமாகப் படர்ந்து நிற்கிறது. அங்கதம் இழையோடும் சரளமான நடையில் நுட்பங்கள் கூடிய விவரணையுடன் அனாயசமாகக் கதையைச் சொல்லிக்கொண்டு போகிறார் பி.ஏ. கிருஷ்ணன்.
ISBN : 9788187477280
SIZE : 14.0 X 1.9 X 21.6 cm
WEIGHT : 385.0 grams
கமல்ஹாஸன் (விஜய் தொலைக்காட்சி)
23 May 2026
கமல்ஹாசனின் புத்தகப் பரிந்துரை
‘புலிநகக் கொன்றை’ நாவல்
பிக் பாஸ் மேடையில் கமல் ஹாசன், எழுத்தாளர் பி. ஏ. கிருஷ்ணன் எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘புலிநகக் கொன்றை’ புத்தகத்தைப் பற்றிப் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான தருணம்.
ஆங்கிலத்தில் அவராலேயே எழுதப்பட்டு, பின்னர் தமிழிலும் அவராலேயே மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவல், மனித குணங்களையும், காலங்கள் கடந்த நட்பின் ஆழத்தையும் பேசும் ஒரு மிக முக்கியமான படைப்பு.
இனம், மதம் ஆகியவற்றைக் கடந்து மனிதர்களின் உள்ளார்ந்த இயல்புகளைப் புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய ஒரு அரிய புத்தகம்!
நன்றி: கமல்ஹாஸன் (விஜய் தொலைக்காட்சி)
PA Krishnan’s first novel tr. By him from its original English version.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
திருப்பாவை - எளிய விளக்கம் (இ-புத்தகம்)
-பெரும்பாலான தமிழர்களின் வாழ்வில் மார்கழி மாதத்துடன் பிரிக்க முடியாதபடி பிணைந்திருப்பது ஆண்டாள் எ மேலும்






