Your cart is empty.
புளித்த அப்பம்
-மேலும்
-தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்களின் வாழ்வு நவீன தமிழிலக்கியத்தில் அதிகம் பதிவாகவில்லை. அந்த வெளியில் தற்போது புத்தம் புதிதாகப் பிரவேசிக்கிறார் ஜார்ஜ் ஜோசப். இவரது கதைகள் வலுவான சம்பவங்களைக் கொண்டவை. அந்தச் சம்பவங் களைக் கதைகளாக்கும் கலைத்திறனும் மொழி ஆளுமையும் ஜார்ஜுக்கு இருக்கின்றன. எந்தக் கதையையும் குறிப்பிட்ட பாத்திரத்தின் கோணத்தில் மட்டும் சொல்லாமல் கூடியவரையில் பலரது கோணங்களையும் கொண்டுவந்துவிடுகிறார். அவ்வகையில் இவரது கதையாடல் இயல்பாகவே பன்முகத்தன்மை பெற்றுவிடுகிறது. இத்தொகுப்பில் உள்ள மூன்று குறுநாவல் களும் சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தருவதோடு சமகால வாழ்வின் பரிமாணங்களையும் உணர்த்துகின்றன.
ISBN : 9789361109126
SIZE : 14.0 X 1.0 X 21.0 cm
WEIGHT : 180.0 grams
நூலகன் (இன்ஸ்டாக்ராமிலிருந்து)
24 Feb 2026
ஜார்ஜ் ஜோசப்பின் ‘புளித்த அப்பம்’ குறுநாவல்கள்
மதிப்புரை
…இந்த புத்தகம் வெறும் கதைகளுக்கான புத்தகம் மட்டும் இல்லாமல் நமது வாசிப்பின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய உதவியாக இருக்கும், ஜார்ஜ் ஜோசப் அவர்களின் கதைகள் யாவும் எளிமையாக இருந்தாலும் அதைச் சொல்லும் விதம் தனித்தன்மையாக இருக்கிறது. முக்கியமாக அவரது பெரிய பலம் அவர் கதாபாத்திரங்களைச் சுற்றி இருக்கும் சூழலை வர்ணிப்பதுதான், அதனை வாசித்து உடனே காட்சிப் படுத்த சவாலாக இருந்தாலும் அதை ஒரு கட்டத்தில் ஜார்ஜ் ஜோசப் எழுத்துப் புலமை இதுதானே என அறிந்தபின் வாசிக்கையில், கவனம் யாவும் அடுத்து எதை எப்படி வர்ணிக்கப் போகிறார் என்ற ஆர்வம் வந்துவிடும் அது ஒரு போதையாகக்கூட மாறும்.
நன்றி: நூலகன் (இன்ஸ்டாக்ராமிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.instagram.com/p/DVG2OU-E0Rr/
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
பெண்ணுடலுக்கு ஒரு சாத்திரம்
-உடற்பயிற்சி, விளையாட்டு ஆகியவற்றில் ஒரு பெண்ணுக்கு இருக்கும்
மிகப்பெரிய தடையாகப் பல சமயம மேலும்














